தாய்- சித்தியுடன் கள்ளத் தொடர்பு: மந்திரவாதியை கொன்றார் மகன்
கடையநல்லூர்:
தனது தாயாருடனும், சித்தியுடனும் கள்ளத் தொடர்பு வைத்திருந்த மந்திரவாதியை 19 வயது வாலிபர் வெட்டிக் கொலை செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநில்லூரைச் சேர்ந்தவர் ஜெயனாதி ராஜா. இவரது தாயார் வசந்தகோகிலா (48) துப்புறவுத்தொழிலாளராக இருந்து வருகிறார். தந்தை குணசேகர் கேரளாவைச் சேர்ந்தவர்.
குணசேரகுக்கு மந்திரம், பில்லி சூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உண்டு. இவருக்கும், சிவகங்கை மாவட்டம் பில்லூர் கிராமத்தைச்சேர்ந்த சிவராமசாமி (35) என்ற மந்திரவாதிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அடிக்கடி குணசேகரின் வீட்டிற்கு பில்லி, சூனியம் தொடர்பாக மந்திரவாதி சிவராமசாமி வரத் தொடங்கினார். அப்போதுஅவருக்கும், வசந்தகோகிலாவுக்கும் இடையே கள்ளத் தாடர்பு ஏற்பட்டது.
அதேபோல, வசந்த கோகிலா மூலம் மதுரையில் உள்ள அவரது தங்கை ஜானகியுடனும் சிவராமசாமிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதுவும் பின்னர் கள்ளக் காதலாக மாறியுள்ளது.
கடையநல்லூருக்கும் மதுரைக்கும் மாறி மாறிச் சென்று சூனியத்தை போக்குவதாகக் கூறி அக்காளுடனும் தங்கையுடனும் ஜாலியாக இருந்துவந்தார் போலி மந்திரவாதி சிவராமசாமி.
இந்த கள்ளக் காதல்கள் குறித்து வசந்த கோகிலாவின் மகன் ஜெயனாதி ராஜாவுக்குத் தெரிய வந்தது. ஆத்திரத்தின் உச்சிக்கே போன அவர்சிவராமசாமியைக் கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து தனது நண்பர் பாலமுருகனுடன் சேர்ந்து திட்டமிட்டார். இந்த நிலையில் தனது தாயாரைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமைஅதிகாலை சிவராமசாமி கடையநில்லூர் வருகிறார் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது.
வீட்டுக்கு வரும் முன்பே அவரை தீர்த்து விட முடிவு செய்து பாலமுருகனுடன், கடையநல்லூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.எதிர்பார்த்தபடியே அதிகாலை 3 மணிக்கு கடையநில்லூர் வந்து இறங்கினார் சிவராமசாமி.
வசந்தகோகிலாவின் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை இருவரும் தொடர்ந்து வந்தனர். தனியான இடத்தில் அவர் நடந்துவந்தபோது பாலமுருகனும், ஜெயனாதி ராஜாவும் சேர்ந்து அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தினர். பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில்அவரை போட்டுவிட்டு இருவரும் தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த சிவராமசாமியை அந்தப் பக்கத்தில் இருந்தோர் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது பாலமுருகனும் ஜெயனாதி ராஜாவும் தான் கொலை செய்தனர் என்று தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications