டெல்லிக்கு வர வழி தெரியுமே
சென்னை:
என்னைக் கூப்பிட்டு செல்வதற்காக எதற்காக டெல்லியிலிருந்து வருகிறீர்கள்? எனக்கு வரத் தெரியுமே என்று மத்திய அமைச்சர்பிரமோத் மகாஜனிடம் டாக்டர் அப்துல் கலாம் கூறினார்.
பாரத ரத்னா அப்துல் கலாம் செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.இதையொட்டி திங்கள்கிழமை அவர் டெல்லி செல்கிறார். அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்காக மத்திய அமைச்சர்மகாஜன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வந்தார்.
லிமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய மகாஜன் கூறியதாவது:
என்னை சென்னைக்கு வரவே கலாம் விடவில்லை. டெல்லியில் இருந்தவண்ணம் டாக்டர் கலாமுடன் தொடர்பு கொண்டு,உங்களை அழைத்துச் செல்வதற்காக நான் சென்னை வருகிறேன் என்று கூறினேன்.
ஆனால், எதற்காக நீங்கள் சென்னை வர வேண்டும். எனக்கே டெல்லி வர வழி தெரியுமே. எதற்காக நீங்கள் வீணாக அலையவேண்டும். நானே வந்துவிடுகிறேன் என்றார் கலாம்.
அதற்கு நான், டாக்டர் சாப், இப்போது நான் பிரதமரின் உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும். நான் உங்களை நேரில் வந்துகூட்டிச் செல்லாவிட்டால் பிரதமர் என்னை சும்மா விட மாட்டார். குடியரசுத் தலைவர் ஆன பிறகு வேண்டுமானால் நீங்கள்சொல்வதை நான் கேட்கிறேன்.
இப்போது நான் சொல்வதை தயவு செய்து நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றேன்.
அதன் பின்னர் தான் என்னை சென்னைக்கு வரவே அனுமதித்தார் கலாம் சாப். அவர் நாம் நினைப்பதைவிடவும் மிகஎளிமையான, மிக எதார்த்தமான, சொல்லப்போனால் அதிசயமான மனிதர் என்றார் மகாஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications