ஜெ.வின் புதிய திட்டத்தால் மறுஜென்மம் பெற்ற 3 ஏழைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டுள்ள இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 3ஏழைகளுக்கு இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளக் கூடிய வசதி இல்லாத, வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கும் 385 பேருக்கு ஆண்டுதோறும்இலவசமாக அறுவைச் சிகிச்சை செய்து தர எம்.ஜி.ஆர். அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.

இதற்காக ஒவ்வொரு நோயாளிக்கும் ரூ. 35,000 வரை செலவிடவும் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. குரியன் போன்ற முன்னணிஇருதய நிபுணர்களைக் கொண்டு இந்த அறுவை சிகிச்சைகள் செய்ய ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாார்.

இந்தத் திட்டம் 3 நாட்களுக்கு முன்பு தான் துவக்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு இதுவரை 3 பேருக்கு இதயம் காப்போம் திட்டத்தின் கீழ்இலவசமாக அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கோவையைச் சேர்ந்த கனகராஜ், சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த விஜயகுமார்,திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகியோருக்கு இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பிரபல இருதய நிபுணர் டாக்டர் கிரிநாத் தலைமையிலான மருத்தவர் குழு இந்த அறுவைச் சிகிச்சையை செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+