எம்.பி., எல்.எல்.ஏ. வந்தால் இனி அதிகாரிகள் எழுந்து நிற்க வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.பியோ அல்லது எம்.எல்.ஏவோ வந்தால் அரசு அதிகாரிகள் எழுந்து நின்று வரவேற்க வேண்டும்.போகும்போது எழுந்து நின்று வழியனுப்ப வேண்டும் என்ற புதிய உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் அதிகாரிகளுக்கான நடைமுறை குறித்து சமீபத்தில மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் இவ்வாறுகூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அநைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவுதமிழகத்தில் உடனடியாக அமலுக்கு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, இனி எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தங்களை சந்திக்க வந்தால் அதிகாரிகள் எழுந்து நிற்க வேண்டும்.அவர்கள் கொண்டு வரும் கோரிக்கையை ஏற்க முடியாவிட்டால் அதை மரியாதையாக அவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.

பொது மக்களை சந்திக்க அதிகாரிகள் தனி நேரத்தை ஒதுக்க வேண்டும். முன் அனுமதி பெற்று பொது மக்களில்யாராவது வந்தால் அவரை முதலில் சந்திக்கலாம். ஆனால், முன் அனுமதி பெறாமல் திடீரென பொது மக்களில்யாராவது ஒருவர் வரும் போது, அதே நேரத்தில் எம்.பி., எம்.எல்.ஏவும் வந்துவிட்டால் முதலில் எம்.பி,எம்.எல்.ஏவைத் தான் சந்திக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+