சென்னையில் தக்காளி விலை திடீர் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தக்காளி விலை படு பயங்கரமாக உள்ளது. கிலோ தக்காளி ரூ.20 தல் 25 வரை விற்கப்படுகிறது.
சென்னை நகரின் முக்கிய மார்க்கெட் கோயம்பேடு. இங்கிருந்துதான் காய்கறிகள் அனைத்தும் சில்லறை வியாபாரிகளுக்குவிற்கப்படுகின்றன.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.இதனால் தக்காளி விலை கிலோ ரூ. 25 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் பெய்த மழையில் தக்காளிகள் அழுகி விட்டதாகவும் இதனால் தான் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்துகுறைந்துள்ளதாகவும் கூறபபடுகிறது.
15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி முன்பு ரூ. 30 முதல் 40 வரை வியாபாரிகளுக்கு விற்கப்பட்டது.
ஆனால் இப்போது இதன் விலை ரூ. 100 ஆகியுள்ளது. நட்டுத் தக்காளியின் விலை ரூ. 130 வரை சென்று விட்டது.












Click it and Unblock the Notifications