100 சதவீத கல்வியறிவு: கலாமின் ஆசை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று ஜனாதிபதி பதவியேற்கவுள்ள டாக்டர் அப்துல் கலாம் கூறினார்.

ஜனாதிபதியான பின்னர் ஆராய்ச்சிகளை நிறுத்திவிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த கலாம் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அவரிடம் போட்டி போட்டுக் கொண்டு நிருபர்கள் கேள்விகளைக்கேட்டனர். முதலில் நீங்கள் கேளுங்கள்.. அப்புறம் நான் கேள்வி கேட்பேன் என்று கூறிக் கொண்டு தனது பேட்டியைத் தொடங்கினார்.

நிருபர்களின் கேள்விகளை முதலில் எழுதிக் கொண்டார். நான் யோசித்துத் தான் பதில் சொல்வேன் என்றார்.

நிருபர்கள் குழுமியிருந்த அந்த அறையில் கலாம் நுழைந்போது அனைவரும் மிக சீரியசாக இருந்தனர். ஏன்.. என்ன ஆச்சு.. எதுக்கு இவ்வளவு சீரியஸ்.. அட,சிரிங்கப்பா என்று அந்த இடத்தில் மிக ஜாலியான மூட் வரவழைத்தார்.

அதன் பின்னர் தான் பேட்டியையே துவக்கினார். அவர் கூறியதாவது:

ஜனாதிபதி தான் ஆகிறேனே தவிர, சன்யாசி ஆகவில்லை. எனது அறிவியல் ஆராய்ச்சிகள் தொடரும். அறிவியலை இப்போது தேச வளர்ச்சிக்காகபயன்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசுடனும் நாடாளுமன்றத்துடனும் இணைந்து தேசத்தை தொழில்நுட்பரீதியில் முன்னுக்குக் கொண்டு வர பாடுபடுவேன்.

இந்திய அரசியல் சட்டத்தின் 51வது பிரிவின்படி மக்களிடையே அரசியல் உணர்வை வளர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. நூறு சதவீதம் கல்வியறிவு,பொருளாதார வளர்ச்சி, ஒருவரை ஒருவரை மதிக்கும் பண்பு. இவை தான் இந்தியாவின் எதிர்காலம் குறித்த என் கனவுகள்.

குஜராத் குறித்து ஒரு நிருபர் என்னிடம் கேட்டார். குஜராத் போன்ற சம்பவங்களை நாம் எப்பாடுபட்டாவது நிறுத்த வேண்டும். மதங்கள் வளர்ந்து அடுத்தநிலையை அடைய வேண்டும். அவை ஆன்மிகம் என்ற புண்ணிய நிலைக்கு உயர வேண்டும்.

அரசியல் தலைவர்கள் அன்பும், பண்பும் மிக்கவர்களாக மாற வேண்டும். நூறு சதவீத கல்வி நிலையை இந்தியா எட்டினால் தான் இது சாத்தியமாகும்.

இந்த நாட்டின் வளத்துக்கும் பாதுகாப்புக்கும் நான் என்றும் உழைப்பேன். ராக்கெட்டுகள், ஏவுகணைகள், அணு ஆயுதம் என என்னனெவோ ஆராய்ச்சிகள்நடத்தியிருக்கிறோம். அவையெல்லாம் இந்த தேசத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தான்.

நாம் யாரையும் சார்ந்து வாழாமல் சுய சார்பான நாடு என்ற உன்னத நிலையை அடைய வேண்டும்.

நான் முதலில் தொழில்நுட்பவாதியா, ஆராய்ச்சியாளான, இந்தியனா, முஸ்லீமா என்று கேட்டார்கள். முதலில் நல்ல மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்.அடுத்தபடியாக ஒரு நல்ல இந்தியனாக வாழ வேண்டும்.

கடந்த 3,000 ஆண்டுகளாக இந்தியாவை மாறி மாறி ஊடுருவி வந்தார்கள் பல நாட்டவர்களும். அவர்கள் துப்பாக்கிகள் எடுத்துக் கொண்டுவந்தபோது வெறும் வாள்களை ஏந்தி நின்றதால் தோற்றோம்.

இன்று அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு உலகை தைரியமாய் சந்தித்து வருகிறோம். இந்த ஆயுதங்கள் தான் சமீபத்தில் மூள இருந்த இந்தியா- பாகிஸ்தான்போரையும் தடுத்தது. இருவரும் இந்த ஆயுதங்களை வைத்திப்பதால் போரை தவிர்த்திருகிறோம். அழிவைத் தவிர்த்திருக்கிறோம்.

நம் அண்டை நாடுகள் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும்போது நாம் மட்டும் கைகைளை தலைக்கு மேல் கும்பிட்டவாறு தபஸ் (தவம்) செய்துகொண்டிருக்க முடியாது.

நாம் அணு ஆயுதம் வைத்திருப்பதை பெரிதுபடுத்துகிறார்கள். அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கம் 10,000 அணுகுண்டுகள் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

1947ம் ஆண்டு ஆகஸ்சட் 15ம் தேதி ஜவஹர்லால் நேரு இந்திய தேசியக் கொடியை ஏற்றியபோது எங்கள்பள்ளியே அவரது உரையைக் கேட்க காத்திருந்தது. ஆனால், தமிழ் மீடியத்தில படித்துக் கொண்டிருந்த எஙகளுக்குஅவரது ஆங்கில உரையும் இந்தி உரையும் புரியவில்லை.

மறுநாள் பத்திரிக்கைகளில் ஒரு பக்கம் நேரு கொடியேற்றும் படமும் மறுபக்கம் வெறும் காலுடன் மகாத்மா நடந்துசெல்லும் படமும் இருந்தது. அதைப் பார்த்த பின்னர் தான் என் உண்மையான கல்வியே ஆரம்பித்தது.

அயோத்தி விவகாரத்தில் முழுமையாக பேசித் தான் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். எதிர்காலத்தில் எழும்பிரச்சனைகளில் மக்களுக்கு எது நல்லதோ அதைத் தான் செய்ய வேண்டும்.

என்னை ஜனாதிபதியாக்கும் இந்த முயற்சிகள் செயல்கள் எல்லாம் எனக்கு சாட்டிலைட்டை ராக்கெட்டில் வைத்துவிண்ணில் செலுத்துவதைத் தான் நினைவுபடுத்துகிறது.

ஜனாதிதியாக வருபவருக்கு அரசியல் அனுபவம் வேண்டாமா என்று கேட்கிறார்கள. எனக்கு அந்த அனுபவம்இல்லை தான். ஆனால், கற்றுக் கொள்ள நான் தயார். 6 பிரதமர்களிடம் சேர்ந்து நான் பணிபுரிந்திருக்கிறேன்என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றார் அப்துல் கலாம்.

பின்னர், இந்த தேசம் குறித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். இளைஞன்.. நான்.. என் நாடு என்ற இந்தப்பாடலை நான் இதுவரை சந்தித்த 50,000 மாணவ- மாணவிகளையும் பாடச் செய்திருக்கிறேன். ஆனால்,பத்திரிக்கையாளர்கள் என்பதால் உங்களை விட்டுவிடுகிறேன். அந்தப் பாடலின் காப்பிகளை தரச் சொல்கிறேன்.படித்துப் பாருங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+