கிளிநொச்சியில் புலிகள்- அரசுப் பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு
வன்னி:
திட்டமிட்டபடி ஜூலையில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை நடக்குமா என்பதுகுறித்து பலவிதமான சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இரு தரப்பினரும் திடீரென மீண்டும் நேரடியாகச்சந்தித்துப் பேசியுள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான இலங்கை அரசின் பிரதிநிதி குணதிலகே தலைமையிலான குழு நேற்று ராணுவஹெலிகாப்டரில் கிளிநொச்சி வந்தது. நார்வே தூதுத் குழுவினரும் உடன் வந்தனர்.
இவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் தலைமையிலான குழுவினரைச்சந்தித்துப் பேசினர்.
பேச்சுவார்த்தை நடத்த அரசு தீவிரமாக இருப்பதாதகவும், இதில் எந்த சந்தேமும் வேண்டாம் எனவும் புலிகளிடம்அரசுப் பிரநிதிகள் தெரிவித்தனர்.
மேலும் கொழும்புவுக்கும் யாழ்பாணத்துக்கும் இடையிலான ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை முழு அளவில் இருதரப்பினரும் பொது மக்களுக்கு திறந்துவிடுவது குறித்தும் அரசுத் தரப்பினர் பேச்சு நடத்தினர்.
அரசின் செயல்களால் அதிருப்தியடைந்துள்ள புலிகள் தாய்லாந்து பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் நடந்தாலேஅது உலக அதிசயம் தான் என்று கூறியுள்ளனர். இந் நிலையில் இரு தரப்பினரும் நேரில் சந்தித்துப் பேசியதுமிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நேற்று நடந்த சந்திப்பின்போது இயக்கத்தின் மீதான தடை நீக்கம் உள்பட போர் நிறுத்தத்தின்போது தரப்பட்டஉறுதி மொழிகள் அனைத்தையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என புலிகள் நிர்பந்தித்தகாகக்கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications