மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: கவுன்சலிங் தொடங்கியது
சென்னை:
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்சி (நர்சிங்), பி.பார்ம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கான கவுன்சலிங் இன்று முதல்தொடங்கியது.
இந்தப் படிப்புகளில் சேர மொத்தம் 14,000 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பம் செய்தவர்கள் பிளஸ் டூ தேர்விலும், நுழைவுத் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களை வைத்து ரேங்க்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 300க்கு 300 பெற்று சரவணகுமார் என்ற மாணவர் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு முதல் சீட் இன்றுஒதுக்கப்பட்டது. சென்னையில் கல்வியமைச்சர் தம்பிதுரை இவருக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்கினார்.
மற்ற மாணவர்களுக்கான கவுன்சலிங்கையும் தொடங்கி வைத்தார். காலை 9.30 முதல் 11.30 வரையிலும்பிற்பகலில் 2 மணி முதல் 3.30 மணி வரை இந்த கவுன்சிலிங் நடக்கும். 22ம் தேதி வரை இந்த கவுன்சலிங் நடக்கும்.
இன்று கவுன்சலிங்கில் 300க்கு 295.48 வரை கட்-ஆப் வைத்துள்ள 400 மாணவர்களுக்கு கவுன்சலிங் நடக்கிறது.
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்வி ஆணைய அலுவலகத்தில் இந்த கவுன்சலிங்நடந்து வருகிறது.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,258 எம்.பி.பி.எஸ். சீட்கள் உள்ளன. இதில் 835 சீட்களுக்கு இந்தகவுன்சலிங் மூலம் இடம் ஒதுக்கப்படவுள்ளது. இவர்களுக்கு அடுத்த மாதம் கல்லூரி தொடங்கும்.
பி.ஈ மாணவர்களுக்கு...
மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சிலிங்குக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமாணவர்களின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடுகிறது.
இந்த மாணவர்களுக்கான கவுன்சலிங் வரும் 24ம் தேதி தொடங்கவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications