ஒயின்ஷாப்களில் கையேந்த போலீசாருக்கு டி.ஜி.பி. தடை
சென்னை:
ஒயின் ஷாப்களில் பிச்சைக்காரர்கள் போல கையேந்தி நிற்கக் கூடாது என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒயின்ஷாப்களில் மாமூல் வசூலிப்பது தமிழக போலீசாரின் முக்கிய கடமைகளில் ஒனறாக இருந்து வருகிறது. ஒருகடை ஒரு மாதத்துக்கு ஒரு ஸ்டேசனுக்கு இவ்வளவு தந்துவிட வேண்டும் என்று எழுதப்படாத விதி உள்ளது.
லோக்கல் ஸ்டேசனுக்கு ஒரு கடை ரூ. 10,000மும் மதுவிலக்குப் பிரிவு போலீசாருக்கு ரூ. 5,000மும் மாதாமாதம்தந்து வருகின்றனர் ஒயின் ஷாப்காரர்கள்.
இதற்கு பதிலாக கடையை இரவு நெடு நேரம் திறந்து வைத்தாலும் போலீஸ்காரர்கள் கண்டு கொள்வதில்லை,கடையிலேயே சைட் ஓட்டை போட்டு சரக்கு விற்கலாம், கதவை பாதி திறந்து வைத்து இரவு முழுவதும் கடைநடத்தலாம், எல்லாவற்றுக்கும் மேலாக கடையிலேயே ஓராமாக உட்கார்ந்து பார் மாதிரி மது அருந்தலாம்.
ஒயின்ஷாப்காரர்களிடம் கைநீட்டி வாங்கிக் கொண்டு இது போன்ற சட்டத்துக்குப் புறம்பான செயல்களை போலீசார்அனுமதித்து வருகின்றனர். அனுமதிப்பது மட்டுமல்ல, இந்த சட்டவிரோத செயல்களுக்கு உதவியும் வருகின்றனர்.
இது தவிர இரவு ரோந்து செல்லும் போலீஸ்காரர்கள் ஒயின் ஷாப்களுக்கு முன்னாள் தலையை சொறிவதும்கடைக்காரச் சிறுவன் அவர்களைத் திட்டிக் கொண்டே 10 ரூபாயை போலீஸ்காரரின் கையில் அமுக்குவதும்வாடிக்கை.
இந்தச் செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்பதால் சிலநடவடிக்கைகளை தமிழக டி.ஜி.பி. நெயில்வால் எடுத்துள்ளார்.
ஒயின் ஷாப்களில் பணம் வசூலிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட உயர்அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளர். ஒரு வாரத்துக்குள் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆகியோர் எக் காரணம் கொண்டும் ஒயின் ஷாப்புகளுக்குள் நுழையவே கூடாதுஎன்றும் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையின் பெயரை அறுவறுப்பான ஒயின்ஷாப் மாமூல் மூலம் கெடுத்தால் யாராக இருந்தாலும் கடும்நடவடிக்கை எடுப்பேன் என்று தனது உத்தரவில் கூறியுள்ளார் டி.ஜி.பி. நெயில்வால்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications