கோட்டையில் இன்னொரு பெண் தற்கொலை முயற்சி
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்நேற்று தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
தலைமைச் செயலக வளாகத்தில் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்வோர் மற்றும் முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவந்ததால் முதல்வர் ஜெயலலிதா கடுமையான எச்சரிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
மேலும், முதல்வரிடம் மனு கொடுக்க வருவோருக்கு உதவியாக மன நல மருத்துவர்கள் கொண்ட ஆலோசனைக் குழுக்களும்அமைக்கப்பட்டன. இதையடுத்து சில வாரங்களாக தற்கொலை முயற்சி எதுவும் நடக்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 36 வயது அழகம்மாள் என்ற பெண் மண்ணெண்ணை ஊற்றிதீவைத்துக் கொள்ள முயன்றார். அப்போது போலீஸார் தலையிட்டு அந்தப் பெண்ணைத் தடுத்தனர்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
அழகம்மாளுக்கும், அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் பணத் தகராறு இருந்து வந்ததாம். இதையடுத்தே அவர் கோட்டைக்குவந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications