சென்னையில் கோவில் தேர் கவிழ்ந்து பக்தர் பலி
சென்னை:
சென்னையில் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட தேர் கவிழ்ந்ததில் பக்தர் ஒருவர் உடல் நசுங்கி இறந்தார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ளது சத்யநாராயணா கோவில். இந்தக் கோவிலுக்காக ரூ. 6.5 லட்சம்செலவில் புதிதாக தேர் ஒன்று செய்யப்பட்டது.
கோவிலில் சிறப்பு பூஜையையொட்டி இன்று உற்சவமூர்த்தியுடன் அந்தத் தேர் வீதி உலா வந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் மிக வேகமாக இழுக்கப்பட்டது. இதனால் வேகமாக உருண்டு வந்த அந்தத் தேர் சாலைத் தடுப்பில் திடீரெனமோதியது. மேலே கேபிள் வயரிலும் சிக்கியது. இதில் நிலை குலைந்த அந்தத் தேர் கவிழ்ந்தது.
கவிழ்ந்த அந்தத் தேர் பக்தர் ஒருவரின் மீது சரிந்து விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி இறந்தார். மேலும்இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையின் கிரேன் உதவியுடன் இந்தத் தேர் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த அசம்பாவிதச் சம்பவம் நடந்துவிட்டதால் பரிகார பூஜைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவிலின்பட்டர் மோகன் தெரிவித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications