வறண்டது காவிரி: உழவு மாடுகளை விற்கும் நிலையில் விவசாயிகள்
தஞ்சாவூர்:
காவிரியில் நீர் வராத காரணத்தால் தஞ்சை மாவட்டத்தில் குறுவைப் பயிர் கருக ஆரம்பித்துள்ளது.
கடனை வாங்கி உழவு செய்துள்ள விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு விவசாய வங்கிகளில் விதை நெல்லைகடன் வாங்கி, பூச்சி மருந்தை கடன் வாங்கி இந்த விவசாயிகள் குறுவைப் பயிரை நட்டனர்.
ஆனால், காவிரியில் சரியான நேரத்தில் நீர் விட கர்நாடகம் மறுத்துவிட்டது. இதனால் பால் பிடிக்கும் பருவத்தில் இருந்த பயிர்கள் வாடஆரம்பித்துவிட்டன. இந்தப் பயிர் விளைவது நிச்சயம் இல்லை என்றாகி விட்டதால் அதை நம்பி வேறு கடனும் வாங்க முடியாத நிலைக்குசிறிய விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பலர் உழவு மாடுகளை விற்று வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
மேலும் பலர் வேறு கூலி வேலைகளுக்குப் போக ஆரம்பித்துள்ளனர். உடனே காவிரியில் நீர் வந்தால் தவிர ஆயிரக்கணக்கான ஏக்கர்நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெல் தப்புவது மிக மிகக் கடினம்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் எவ்வளவோ போராடியும் அரசிடம் இருந்து உரிய பதில் இல்லை என்பதால் வெறுத்துப் போய்உள்ளனர்.
இதனால் இந்தப் பிரச்சினையில் பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு பயிர்களை காக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது. அக் கட்சியின்எம்.பி. விஜயக்குமார் பிரதமர் வாஜ்பாய்க்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
நாகப்பட்டனம் மக்களவைத் தொகுதி எம்.பியான விஜயக்குமார் எழுதியுள்ள கடிதத்தில்,
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நிலையை நேரில் ஆராய மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும்.
போதுமான தண்ணீர் இல்லாமல் 15 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் உடனடியாக தலையிட்டு கர்நாடகத்திலிருந்துகாவிரி நீரை திறந்து விடுமாறு அம் மாநில முதல்வர் கிருஷ்ணாவை வற்புறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications