தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்: 1,000 பேர் கைது
மதுரை:
ஸ்டாலினிடம் இருந்து சென்னை மேயர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர்இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கத்திப்பாரா சந்திப்பில் நேரு சிலை அருகே திமுகவினர் இன்று காலை சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பி. பொன். மாணிக்கவேல்தலைமையிலான போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் பல திமுகவினர் காயமடைந்தனர். இதைப் படம் பிடித்த சன் டிவி கேமரமேனுக்கும் நிருபருக்கும் அடிவிழுந்தது. இவர்களை மாணிக்கவேல் தாக்கி கேமராவைப் பறித்தார்.
சிறிது நேரம் கழித்து கேமராவைத் தந்த மாணிக்கவேல் அதிலிருந்து கேசட்டை தர மறுத்துவிட்டார். அதில்திமுகவினரை போலீசார் தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில்....
மதுரையிலும் ஸ்டாலின் பதவிப் பறிப்பைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. கட்டபொம்மன் சிலைஅருகே நடந்த இந்தப் போராட்டத்தில் மேயர் செ. ராமச்சந்திரன், துணை மேயர் சின்னச்சாமி உள்ளிட்டநூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையில்...
புதுக்கோட்டையிலும் திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 100 திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.
இதே போல தர்மபுரி, கரூர், நாகப்பட்டிணம், திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்துபோராட்டங்கள் நடந்து வருகின்றன.
தங்கள் கட்சியைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications