வெள்ளை மாளிகை மீது பறந்த மர்ம விமானம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் மேல் அடையாளம் தெரியாத ஒரு விமானம் வானில் வட்டமடித்தது.இதனால், அதிபர் மாளிகை உடனடியாக காலி செய்யப்பட்டது.

அங்கிருந்த அதிபர் புஷ் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நேற்றிரவு இந்தப் பரபரப்புச் சம்பவம் நடந்தது. ரீகன் தேசிய விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த அந்தவிமானம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொள்ளாமல் பறந்து கொண்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த உளவுப் பிரிவினர் உடனடியாக வெள்ளை மாளிகையை காலி செய்ய உத்தரவிட்டனர்.

ராணுவத்தின் எப்-16 ரக விமானங்கள் அதை வானில் சுற்றி வளைத்தன. பின்னர் அந்த விமானம்தரையிறக்கப்பட்டது. இது குறித்து விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, அது தனியாருக்கு சொந்தமானவிமானம் என்பதும், தவறுதலாக அந்த விமானம் வெள்ளை மாளிகை வான் வெளியில் பறந்ததாகவும்தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+