ஹேர் ஸ்டைலை மாற்ற விரும்பாத கலாம்
டெல்லி:
குடியரசுத் தலைவராக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள "பாரத ரத்னா" அப்துல் கலாம் தன்னுடைய முடிஅலங்காரத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது.
ஒரு அணு விஞ்ஞானியாக இருந்த போதெல்லாம் அவருடைய தோற்றத்தை சிறிதும் கண்டு கொள்ளாத பலரின்கண்களைத் தற்போது அவருடைய தலை முடி உறுத்தத் தொடங்கியுள்ளது.
எளிமையான உடை, சாதாரண ரப்பர் செருப்பு என்று வளைய வரும் கலாமின் தொங்கிக் கொண்டிருக்கும் தலைமுடியே அவருக்கென ஒரு தனி ஸ்டைலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஆனால் விரைவில் நாட்டின் முதல் குடிமகனாகப் பதவியேற்கவுள்ள கலாம் தன்னுடைய முடி அலங்காரத்தைமாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிவசேனைத் தலைவரான பால் தாக்கரே கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போல், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்போல் கலாமும் தன்னுடைய முடி அலங்காரத்தைக் கச்சிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பால் தாக்கரேகூறியுள்ளார்.
ஆனால் கலாம் தன்னுடைய முடி அலங்காரத்தை மாற்றப் போவதில்லை என்றே தெரிகிறது.
இந்த முடி அலங்காரம் தான் என்னை மக்களிடம் அடையாளம் காண்பிக்கிறது. இது இல்லை என்றால் நான்அப்துல் கலாமே இல்லை என்று தன்னுடைய ஆஸ்தான முடி திருத்தும் நிபுணரிடம் அவர் முன்பு ஒரு முறைகூறியுள்ளார்.
எனவே யார், என்ன கூறினாலும் சரி. தன்னுடைய முடி அலங்காரத்தை மட்டும் கலாம் எந்தக் காரணத்தைக்கொண்டும் மாற்றவே மாட்டார் என்று தெரிகிறது.
புத்தகத்தை விற்கத் தூண்டிய வறுமை:
இதற்கிடையே அப்துல் கலாம் தன்னுடைய இளம் வயதில் பலவிதத்திலும் வறுமையைச் சந்தித்துள்ளார்.
1957ம் ஆண்டு அவர் சென்னையில் உள்ள எம்.ஐ.டியில் படித்துக் கொண்டிருந்த போது ராமேஸ்வரத்தில் ஏற்பட்டகடுமையான புயலில் கலாமின் தந்தையிடமிருந்த ஒரே படகும் மூழ்கி விட்டது.
இது தொடர்பாக கலாமுக்கு அவருடைய தந்தை ஒரு தந்தியை அனுப்பியிருந்தார். கலாமும் உடனடியாகராமேஸ்வரத்துக்குச் சென்று தந்தையைப் பார்க்க விரும்பினார்.
ஆனால் கையில் சுத்தமாகப் பணம் கிடையாது. அப்போதைய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரான ஏ.எல்.முதலியார் அவருக்கு அன்பளிப்பாக அளித்திருந்த ஒரு புத்தகத்தை விற்க முடிவு செய்தார் கலாம்.
உடனே அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்ட கலாம், மூர் மார்க்கெட்டுக்குச் சென்று அங்குள்ள ஒரு புத்தகக்கடையில் அதைக் கொடுத்தார். புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த கடைக்காரர் அது கலாமுக்கு அன்பளிப்பாக வந்தபுத்தகம் என்பதைத் தெரிந்து கொண்டார்.
அதன் பிறகு கலாமிடம் விவரங்களைக் கேட்டறிந்த கடைக்காரர், ராமேஸ்வரம் போவதற்கான பணத்தைக்கொடுத்து, முடிந்த போது பணத்தைக் கொடுத்து விட்டு புத்தகத்தைத் திருப்பி வாங்கிக் கொள், அது வரை இதைப்பத்திரமாக வைத்திருக்கிறேன், யாரிடமும் விற்க மாட்டேன் என்று கூறி பணம் கொடுத்தார்.
சில மாதங்களுக்குப் பின்னர், வாங்கிய பணத்தை அந்தக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு அந்தப் புத்தகத்தைத்திரும்பப் பெற்றுக் கொண்டார் கலாம்.
வறுமையால் சைவம்:
மேலும் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது விடுதியில் சைவச் சாப்பாட்டுக்கு ரூ.35ம் அசைவச்சாப்பாட்டுக்கு ரூ.45ம் வசூலிக்கப்பட்டது. இந்தப் பத்து ரூபாயை மிச்சப்படுத்த வேண்டுமே என்பதற்காகசைவத்திற்கு மாறிய கலாம், பின்னர் அதுவே அவருக்கு மிகவும் பிடித்து விட முழு நேர சைவத்திற்கே மாறிவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications