யூனிசெப் மீட்ட 60 குழந்தை புலிகள்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த 60 குழந்தைகளை ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த யூனிசெப் என்றகுழந்தைகளுக்கான நிறுவனம் மீட்டுள்ளது.
18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை ராணுவத்திலோ அல்லது போராளிகள் இயக்கத்திலோ சேர்க்கக் கூடாதுஎன்று ஏற்கனவே யூனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆனால் அதையும் மீறி ஏராளமான குழந்தைகளை (குறிப்பாக 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட குழந்தைகளை) புலிகள்தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டு அக்குழந்தைகளுக்குப் பயிற்சிகளும் அளித்துக் கொண்டிருப்பதாகஅந்நிறுவனம் புகார் கூறியுள்ளது.
யூனிசெப் நிறுவனம் மட்டுமல்லாமல் வேறு பல அமைப்புகளும் இலங்கை ராணுவமும் கூட புலிகள் மீது இந்தப்புகாரைக் கூறிக் கொண்டே இருந்தன.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் மட்டும் சுமார் 60 குழந்தைப் போராளிகளை புலிகளிடமிருந்துமீட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் யூனிசெப் கூறியுள்ளது.
மேலும் இன்னும் இவ்வியக்கத்தில் 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் உள்ளனரா என்பதை நேரில் வந்துஆய்வதற்காக யூனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு செய்தித் தொடர்பாளர் வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைவரவுள்ளார்.
பேச்சு தாமதம் - இலங்கை விளக்கம்:
இதற்கிடையே பேச்சு வார்த்தை தாமதமாகி வருவதற்கான காரணங்களை இலங்கை அரசு இன்று விளக்கியுள்ளது.
பேச்சுவார்த்தைக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து முடிக்காமல் பேச்சைத் துவங்கினால்தான் அது தவறு என்றும் அந்த முன்னேற்பாடுகளைச் செய்வதில் கால தாமதம் ஏற்படுவது இயல்பு தான் என்றும்இலங்கை அரசியல் விவகார அமைச்சரான பெய்ரிஸ் இன்று நிருபர்களிடம் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முறையாகவும் முடிந்த அளவு விரைவாகவும் தான் நடந்து வருகின்றன.பேச்சுவார்த்தைக்கான தேதியை அறிவிப்பதில் எல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது. அதற்காக அவசரப்படவேண்டியதில்லை என்றும் பெய்ரிஸ் தெரிவித்தார்.
அமைதிப் பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால் அது உண்மையிலேயே உலக அதிசயம் தான் என்று சமீபத்தில்தான் புலிகள் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பெய்ரிஸ் இன்று விளக்கமளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications