தடகள வீராங்கனை பாண்டீஸ்வரியிடம் பணம் மோசடி: காதலர் குடும்பம் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரையைச் சேர்ந்த பிரபல தடகளை வீராங்கனை பாண்டீஸ்வரியிடம் வரதட்சணையாக கொடுக்குமாறு அவரது பரிசுப் பணத்தையும்,சொத்துக்களையும் பறித்துக் கொள்ள முயன்ற அவரது காதலர் மற்றும் குடும்பத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை சிங்காரபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி.பிரபல தடகள வீராங்கனையான இவர் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் தங்கம்உள்ளிட்ட பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். ரயில்வே துறையில் கம்ப்யூட்டர் பிரிவில் இவர் பணியாற்றி வருகிறார்.

நெல்லை பிராவிடன்ட் பண்ட் அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் வேதமாணிக்கம் என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துவந்தார் பாண்டீஸ்வர். இதற்கு இரு வீட்டாரும் ஒப்புதல் தெரிவித்ததால் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுசெய்திருந்தனர்.

கடந்த 2000மாவது ஆண்டில் ஆசிய அளவில் நடந்த தடகளப் போட்டியில் பாண்டீஸ்வரிக்கு தங்கப் பதக்கமும், ரூ. 2 லட்சம் பரிசுத்தொகையும் கிடைத்தது. இந்தப் பரிசுப் பணம் வேதமாணிக்கத்தின் கண்ணை உறுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாது, சென்னையிலும் மதுரையிலும் பாண்டீஸ்வரி பெயரில் உள்ள சில சொத்துக்களையும் திட்டமிட்டு பறிக்க காதலர்வேதமாணிக்கமும் அவரது வீட்டினரும் திட்டமிட்டனர்.

முதலில் வரதட்சணை என்று எதையும் கேட்காத அவர்கள், திடீரென இந்தக் கல்யாணம் நடக்க வேண்டுமானால் பாண்டீஸ்வரிக்கு வந்தபரிசுப் பணம் மற்றும் சொத்துக்களை வேதமாணிக்கத்தின் பெயருக்கு மாற்றித் தருமாறு கூறியுள்ளனர்.

இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த பாண்டீஸ்வரியின் குடும்பத்தினர், மகள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக ரூ. 2லட்சம் பரிசுத் தொகையை வேதமாணிக்கம் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால், அதன் பிறகும் சொத்துக்களைக் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர். பாண்டீஸ்வரி குடும்பத்தினர் தர மறுத்தனர். இந் நிலையில்வேதமாணிக்கம் திடீரென பாண்டீஸ்வரியிடமிருந்து ஒதுங்கத் தொடங்கினார்.

இதனால் வேதமாணிக்கத்தின் வீட்டுக்கு பாண்டீஸ்வரி குடும்பத்தினர் சென்று திருமணம் குறித்து பேச முயன்றனர். ஆனால் அவர்களைஉள்ளே விடவே மறுத்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தினர் திருமணம் எல்லாம் நடக்காது, சொத்துக்களை மாற்றிக் கொண்டு வாருங்கள்.பிறகு பேசலாம் என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டீஸ்வரி மதுரை தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில்வேதமாணிக்கம், அவரது தந்தை ஜார்ஜ், சகோதரர் ஜெயசீலன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+