ரூ. 25 லட்சம் கொடுத்தால் என்.ஆர்.ஐகளுக்கு மெடிக்கல் சீட்
சென்னை:
அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு இந்தியர்களிடமிருந்து ரூ.25 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படும்என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செம்மலை தெரிவித்தார்.
இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சலிங் நேற்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
இதற்காக இந்த ஆண்டு கூடுதலாக 315 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் 50இடங்களும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், சேலம் மருத்துவக் கல்லூரியில் 75இடங்களும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் 40 இடங்களும் மற்றும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் 50 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் வெளிநாட்டு இந்தியர்களுக்காக (என்.ஆர்.ஐ.) மட்டும் 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சேரவிரும்பும் வெளிநாட்டு இந்தியர்கள் 50 ஆயிரம் டாலர்கள் (ரூ.25 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்றுசெம்மலை கூறினார்.
வெளிநாட்டு இந்தியர்களிடம் இவ்வளவு அதிகமாகப் பணம் வசூலிக்கும் முறையை கர்நாடக மாநிலம் தான்அறிமுகப்படுத்தியது. தற்போது அதே பாணியில் தமிழகத்திலும் தற்போது ரூ.25 லட்சம் வரை கட்டணமாகவசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆண்டில் அவர்கள் ரூ.10 லட்சம் கட்ட வேண்டும் என்றும் அதற்கடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் தலா ரூ.5லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறிய செம்மலை, இந்தக் கட்டணம் மருத்துவக் கல்லூரிகளின் மேம்பாட்டுப்பணிகளுக்காகச் செலவழிக்கப்படும் என்றும் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications