மதப் பள்ளிகளுக்கு பாகிஸ்தான் புதிய கட்டுப்பாடு
இஸ்லாமாபாத்:
மதரஸாக்கள் எனப்படும் மதப் பள்ளிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
தீவிரவாதிகளை உருவாக்குவதில் இந்த மதப் பள்ளிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற இந்தப் பள்ளிகளுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது. பதிவுசெய்யப்படாத மதரஸாக்கள் உடனடியாக மூடப்படும் என்றும், அரசின் நிதி உதவியைப் பெற வேண்டுமானால்மதக் கல்வியுடன் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் கல்வியையும் போதிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மதரஸாக்களில் வெளிநாட்டினர் சேர்ந்து படிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுகளைஒழுங்காக பராமரிக்க வேண்டும் எனவும், ஆண்டுதோறும் அரசிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.
முதலில் நூற்றுக்கணக்கான மதப் பள்ளிகளுக்கு அரசின் உதவி நிதியை பாகிஸ்தான் நிறுத்தியிருந்தது. இப்போதுஇந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என பாகிஸ்தானுககு உலக அளவில் கடும்நெருக்குதல் தரப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தீவிரம்:
இந்தியாவின் போர் மிரட்டலையடுத்து பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் நெருக்கடி பல மடங்குஅதிகரித்துள்ளது. தீவிரவாதிகளை தடுக்காவிட்டால் உலக வங்கியின் நிதி உதவியை நிறுத்துவோம் எனஅமெரிக்கா எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதை அமெரிக்கா நேரடியாகக் கண்காணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு தர இருந்த போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் இப்போதைக்குத் தரமுடியாது என அமெரிக்கா கூறிவிட்டது.
ஆப்கானிஸ்தான் எல்லையைக் கண்காணிக்க இந்த விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்காஇலவசமாக தரவுள்ளது. இவற்றின் மதிப்பு 73 மில்லியன் டாலர்களாகும். ஆனால், தீவிரவாதிகளை ஒடுக்குவதைபாகிஸ்தான் முழு அளவில் செயல்படுத்தினால் தான் இந்த உதவி கிடைக்கும் என்று கூறப்பட்டுவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications