காவிரி நீர்: கர்நாடக முதல்வரை சந்திக்க பாமக எம்.பி, எம்.எல்.ஏக்கள் திட்டம்
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை பாட்டாளி மக்கள் கட்சி எம்.பிக்களும்எல்.எல்.ஏக்களும் சந்திக்கவுள்ளனர்.
நாளை மறுநாள் (22ம் தேதி) அவர்கள் பெங்களூரில் கிருஷ்ணாவை சந்திக்கின்றனர் என அக் கட்சியின் நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் முதல்வர் கிருஷ்ணாவை சந்திப்பர்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப் படும். ஆனால், இந்தஆண்டு மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்படாததால் மேட்டூர் அணைகாய்ந்துவிட்டது. இதனால் குறுவைப் பயிர் (short term paddy crop) பயிர் காயந்து வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி இந்த ஆண்டு மே மாதம் வரை தமிழகத்துக்கு கர்நாடகம் 45டி.எம்.சி. நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தரவில்லை. இதைப் பெற தமிழக அரசு எந்த முயற்சியும்எடுக்கவில்லை.
வேறு விஷயங்களில் அதிமுக அரசு காட்டி வரும் ஆர்வத்தை இதில் காட்டவில்லை. நீர் இல்லாவிட்டால் சுமார் ரூ.500 கோடியை விவசாயிகள இழப்பர். இதை அவர்களால் தாங்க முடியாது.
அடுத்த ஒரு மாதத்துக்குள் காவிரியில் தண்ணீர் வராவிட்டால் சம்பா பயிறும் (long term paddy crop) பாதிக்கப்படும்.இது காவிரி டெல்டாவில் வசிக்கும் விவசாயிகளின் உயிருடன் விளையாடுவதற்கு சமம் என்று கூறியுள்ளார்ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications