வீட்டில் விபச்சாரம்: முன்னாள் நடிகரின் மகன், மருமகள் கைது
சென்னை:
டான்ஸ் கற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து வந்து கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வேணுகோபால் என்பவரும்,அவரது மனைவி ஷோபனா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட வேணுகோபால், பழம்பெரும் வில்லன் நடிகர் ராமதாஸின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். படங்களில் வரும் வில்லன்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ராமதாஸ். சமீபத்தில் கூட மூவேந்தர் என்ற படத்தில் நம்பியார்,சரத்குமாருடன் சேர்ந்து நடித்திருந்தார். இவரது மகன் வேணுகோபால். இவரது மனைவி ஷோபனா.
இவர்கள் இருவரும் சென்னை தி.நகரில் உள்ள ராமதாஸின் வீட்டின் மாடியில் சினிமா குரூப் டான்ஸ் குழு என்ற பெயரில் ஒரு டான்ஸ்குரூப்பை நடத்தி வந்தார்கள். ஆனால் டான்ஸ் குரூப் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து போலீஸாருக்குப் புகார் வந்தது.
இதையடுத்து இந்தக் கும்பலை கையும் களவுமாக பிடிக்க போலீஸார் முடிவு செய்தனர். விபச்சாரத் தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர்விஜயக்குமார் தலைமையிலான போலீஸ் படை மாறு வேடத்தில் அந்த பங்களாவுக்குள் நுழைந்தது.
அப்போது இவர்களை கஸ்டமர்கள் என்று நினைத்து விலை பேச வந்த விபச்சாரப் பெண்கள் "கையும் களவுமாக" பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வந்தன. வேணுகோபாலும், அவரது மனைவி ஷோபனாவும்,சினிமாவில் டான்ஸ் ஆட வாய்ப்புத் தேடும் இளம் பெண்களை அடையாளம் கண்டு தங்களது பங்களாவுக்கு அழைத்து வருவார்களாம்.
அங்கு டான்ஸ் கற்றுத் தருவதாகக் கூறி சேர்த்துக் கொள்வர். பின்னர் அவர்களுக்கு சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி விபச்சாரத்தில்ஈடுபடுத்துவர். இதுபோல பல பெண்கள் அவர்களிடம் சிக்கித் தவித்து வந்துள்ளனர்.
போலீஸ் வேட்டையின்போது விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிர்மலா, மீரா, விஜயஸ், ஷோபனா மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்தமீனாட்சி, ஸ்ரீமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் வந்த கஸ்டமர்களான மகேஷ், சிவா ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். வேணுகோபாலையும் அவரதுமனைவியையும் கைது செய்தனர். மேலும் பலரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பெண்களை வைத்து இவர்கள் புளு பிலிமும் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்தப் பெண்களை வைத்து ஆபாச நடனம் ஆட வைத்துபடம் எடுத்தும் விற்று வந்துள்ளனர் இந்தத் தம்பதி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications