ரேஷன் அரிசி விவகாரத்தில் தமிழக அரசு பல்டி
சென்னை:
குடும்பத் தலைவர் வந்தால் தான் ரேஷன் கடையில் அரிசி வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு தற்போது தனது உத்தரவைமாற்றிக் கொண்டுளளது.
சமீபத்தில் தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ரேஷன் அரிசியை வாங்குவதற்கு கூப்பன் வழங்கப்படும். ரேஷன் கார்டில்உள்ள குடும்பத் தலைவரே நேரில் வந்து, கூப்பனைத் தந்து தான் அரிசியை வாங்க வேண்டும். வேறு யார் வந்தாலும் அரிசி வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு கண்டிப்பாக கூறியிருந்தது.
அரசின் இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது. ரேஷன்பொருட்களை வாங்குவதற்கு பெரும்பாலும் பெண்களே போகும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது.
இந் நிலையில், குடும்பத் தலைவரே நேரில் வர வேண்டும் என்று அரசு கூறி விட்டதால் தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.வேலைக்குப் போகும் ஆண்கள் இதற்காக ரேசன் கடைக்கு வருவது சிரமம் என்பதால் அரசுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகிளம்பியது.
அதிமுவின் முக்கிய ஓட்டு வங்கியான பெண்களே தங்களுக்கு சாபம் விடுவது கண்டு அதிர்ச்சியடைந்த அரசு தனது உத்தரவை மாற்றிக்கொண்டுள்ளது.
இந் நிலையில் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவுச் செயலாளர் சூரியப் பிரகாசம் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை ஏற்ற உயர்நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து தமிழக அரசு தனது உத்தரவை மாற்றிக் கொண்டுள்ளது. நேற்றிரவு திடீரென வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அரசுகூறியிருப்பதாவது:
குடும்பத் தலைவரே ரேஷன் அரிசி வாங்க வர வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவர் வர முடியாதபட்சத்தில் அவரது மனைவி வந்து அரிசியை வாங்கலாம்.
குடும்பத் தலைவராக பெண் இருந்தால் அவரது கணவரும் வந்து ரேஷன் அரிசியை பெறலாம்.
குடும்பத் தலைவர் உயிருடன் இல்லாத பட்சத்தில், அவரது மகனோ அல்லது மகளோ அல்லது நெருங்கிய உறவினர்களோ வந்துஅரிசியைப் பெறலாம்.
குடும்பத் தலைவர் இல்லாத பட்சத்தில், அரிசி வாங்க வருவோர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரிகளிடம் சான்றிதழ்பெற்ற பின்னர் கூப்பனுடன் அரிசி வாங்க வர வேண்டும் என்று தமிழக அரசு தனது புதிய உத்தரவில் கூறியுள்ளது.
இதனால் ஒரு பக்கம் மக்கள் மகிழ்ந்தாலும் சான்றிதழ் வாங்க கிராம நிர்வாக அதிகாரிகள் லஞ்சம் கேட்பார்களே? அதை எப்படி சமாளிப்பதுஎன்ற புதிய கவலையில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
மொத்தத்தில் ரேசன் அரிசி பிரச்சனை தீராது போலிருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications