ஸ்டாலின் ஊர்வலத்துக்கு போலீஸ் தடை
சென்னை:
மேயர் பதவி பறிக்கப்பட்டது குறித்து மக்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க ஸ்டாலின் போட்டிருந்த திட்டத்துக்கு காவல்துறை ரூபத்தில்பிரச்சனை வந்துள்ளது.
சென்னையில் காவல்துறை தடுப்புச் சட்டம் அமலில் உள்ளதால் ஊர்வலமாகச் செல்ல ஸ்டாலினுக்கு சென்னை காவல்துறை தடைவிதித்துள்ளது.
தனது மேயர் பதவியை அரசு பறித்துக் கொண்டது குறித்து சென்னை நகர மக்களிடம் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) முதல் நேரில்சென்று விளக்கம் தர திட்டமிட்டிருந்தார்.
எனது பதவிப் பறிப்பை எதிர்த்து கோர்ட்டில் வழக்குப் போட மாட்டேன், என்னைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் நேரடியாக சென்றுமுறையிடப் போவதாக ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி இன்று முதல் அவர் சென்னை நகரின் பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க இருந்தார்.
20ம் தேதி புரசைவாக்கம், 21ம் தேதி பெரம்பூர், 22ம் தேதி தி.நகர், 23ம் தேதி திருவல்லிக்கேணி, 24ம் தேதி துறைமுகம், 25ம் தேதிசைதாப்பேட்டை, 26ம் தேதி சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில்ம மக்களை சந்திக்க இருந்தார்.
இதன்படி இன்று மாலை புரசைவாக்கத்தில் ஊர்வலமாகச் சென்று மக்களைச் சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். சிறிய பொதுக் கூட்டம்நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு காவல்துறை தடை விதித்துவிட்டது.
இது குறித்து காவல்துறை ஆணையர் விஜய்குமார் கூறுகையில், நகரில் தடையுத்தரவு அமலில் உள்ளது. ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்தவிரும்புவோர் 5 நாட்களுக்கு முன் போலீசிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் நேற்று தான் அனுமதி கேட்டார். இதனால்,அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications