பாண்டி. சட்டசபையில் தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஐ.ஜியிடம் புகார் கொடுக்க சென்ற உதவி சப் இன்ஸ்பெக்டரை, சஸ்பெண்ட் செய்வதாக ஐ.ஜி மிரட்டியதால்விரக்தியடைந்த அவர் சட்டசபை வளாகத்திற்குள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
பாண்டிச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல்துறையில் உதவி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கோவிந்தசாமி. இவரை எஸ்.பி ஏதோதிட்டியுள்ளார். இதுகுறித்து ஐ.ஜி. சிங்கிடம் புகார் கொடுக்க கோவிந்தசாமி சென்றார்.
அப்போது உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை கேட்டு நடக்காமல் அவர் மீது புகார் தர வந்தாயா என்று கேட்ட ஐ.ஜி., உன்னை சஸ்பெண்ட்செய்யப் போகிறேன் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனால் வெறுப்படைந்த கோவிந்தசாமி, நேராக சட்டசபை வளாகத்திற்குள் உள்ள பத்திரிக்கையாளர் அறைக்கு வந்தார். பின்னர் கையோடுகொண்டு வந்திருந்த தூக்க மாத்திரைகளைப் போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
அவரை பத்திரிக்கையாளர்கள் தடுத்து மாத்திரைகளைப் பறித்தனர். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஓடி வந்தனர். கோவிந்தசாமியை சமாதானப்படுத்தி ஐ.ஜி. அறைக்குக் கூட்டிச் சென்றனர். அங்குஅவர் சஸ்பெண்ட் செய்யப்பட மாடடார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு கோவிந்தசாமி வீடு திரும்பினார்.
ஒரு போலீஸ்காரர் சட்டசபை வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்பு தற்கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் பாண்டிச்சேரியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications