மும்பை- கன்னியாகுமரி ரயில் தடம்புரண்டது: 23 பேர் காயம்
பெங்களூர்:
மும்பை- கன்னியாகுமரி ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்- 1081) கர்நாடக மாநிலம் வாடி என்ற இடத்தில்தடம் புரண்டது. இதில் 23 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 2 பேரின் நிலைமை ஆபத்தான நிலைமையில்உள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று மாலை 3.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் இன்று காலை 4 மணிக்கு குல்பர்கா ரயில்நிலையம் வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. காலை 5.30 மணிக்கு குல்பர்கா மாவட்டத்தில் வாடிரயில் நிலையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது.
வாடிக்கும் நல்வாட் என்ற இடத்துகும் இடையே சென்ற போது இந்த ரயிலின் 10 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி தடம் புரண்டன. தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்கி எறியப்பட்டனர்.
தடம்புரண்டதில் 8 பெட்டிகள் 2ம் வகுப்பு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளாகும். ஒரு பெட்டி அன்-ரிசர்வ்ட் பெட்டி.இன்னொன்று கார்டின் பெட்டி.
பெட்டிகளும் ஒன்றின் மீது ஒன்று மோதின. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறினர். தரையில் இறங்கி ஓடியரயில் சிறிது தூரம் சென்று நின்றது. இதில் 23 பேர் காயமடைந்தனர். இதில் 18 பேருக்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது.
மற்ற 5 பேரும் குல்பர்கா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு படுகாயம்ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் (எண்7031),நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (1091) உள்பட 6 ரயில்கள் செகந்திரபாத் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications