விசா வழங்க கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரிட்டன்
டெல்லி:
இங்கிலாந்துக்குச் செல்ல விசா வழங்குவதில் விதித்திருந்த கட்டுப்பாடுகளை அந் நாடு தளர்த்தியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உச்சகட்டத்தை எட்டியபோது விசா வழங்குவதில் பலகட்டுப்பாடுகளை பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. தூதரக ஊழியர்களையும் திரும்ப அழைத்தது.
பெற்றோரைச் சந்திக்கவும், குழந்தைகளை சந்திக்கச் செல்லும் மட்டுமே விசாக்கள் வழங்கப்பட்டன.
இப்போது இந்தக் கட்டுபாடுகள் சிலவற்றை பிரிட்டன் தளர்த்தியுள்ளது. இப்போது டிராப் பாக்ஸ் கேட்டகரி என்றுஅழைக்கப்படும் அவசரமாக செல்ல விரும்புவோர், பிரிட்டனில் நிரந்தரமாகக் குடியேற விரும்புவோர்ஆகியோருக்கு விசாக்கள் வழங்க தூதரகம் முன் வந்துள்ளது.
தீவிரவாதிகள் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்:
இந் நிலையில் தீவிரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் முழுமையாகக் கைவிட்டால் மட்டுமே காஷ்மீர்பிரச்சயைைத் தீர்க்க முடியும் என பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.
லண்டனில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தித் தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும். ஆனால், முதலில்தீவிரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தியாக வேண்டும். இந்தியாவுக்கு தீவிரவாதிகளை ஏற்றுமதிசெய்வதையும் நிறுத்த வேண்டும். இது நடந்தால் தான் இந்தியா பேச்சுவார்த்தை முன் வரும்.
சரியான நேரத்தில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா இரு நாடுகளுக்கும் சென்று போரை தவிர்க்கஉதவினார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவியபோது இரு நாடுகளுக்கும் இங்கிலாந்து ஆயுதங்களைஏற்றுமதி செய்ததாக சிலர் புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர்.
உண்மையைச் சொல்கிறேன், அப்படி எந்த காரியத்தையும் இங்கிலாந்து செய்யவில்லை. அதற்காக காஷ்மீர்பிரச்சனை தீரும் வரை இங்கிலாந்து தனது ஆயுதத் தொழிற்சாலைகளை மூடிவிடவா முடியும்?
இரு நாடுகளுக்கும் நாம் ஆயுதங்கள் தருகிறோம். ஆனால், போர் அபாயம் சூழந்தபோது நாம் ஆயுதம் தரவில்லைஎன்றார் பிளேர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications