கை நீட்டினால் நிற்கும் டவுன் பஸ்: "டிராபிக்" ராமசாமி வழக்கு
சென்னை:
கை காட்டினால் நின்று மக்களை ஏற்றிச் செல்லும் டவுன் பஸ்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் "டிராபிக்"ராமசாமி என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னையில் சமீபத்தில் 5 வழித்தடங்களில் புதிய டவுன் பஸ்கள் சோதனைரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்களை எங்குவேண்டுமானாலும் கை காட்டி நிறுத்தி ஏறிக் கொள்ளலாம் என்பதால் மக்களுக்கு மிகுந்த வசதியாக இருந்து வருகிறது.
இந்த சேவையை நகர் முழுவதும் அறிமுகப்படுத்தவும் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், இந்த பஸ்களுக்குத் தடை விதிக்கக் கோரி "டிராபிக் ராமசாமி" என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பொதுவாகவே அரசு பஸ்களால் தான் சென்னை நகரில் அதிக விபத்துக்கள்நடக்கின்றன. தனியார் வாகனங்களின் பங்கு இதில் மிகவும் குறைவு தான்.
இந்த நேரத்தில் புதிதாக எங்கு கை காட்டினாலும் நிற்கும் பஸ்களை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதனால்விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
பஸ்கள் திடீர் திடீரென நின்றால் பின்னால் வரும் வாகனங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே இந்த பஸ்களுக்குக் கோர்ட் தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் டிராபிக் ராமசாமி.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து 3 வாரத்திற்குள் பதில்அனுப்புமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications