பேப்பரில் சுருட்டி.. வாழை இலையால் மூடி சாலையில் கிடந்த உயிர்
சென்னை:
பிறந்து ஒரு நாளேஆன பெண் சிசு செய்தித்தாளில் வைத்து சுருட்டப்பட்டு, வாழை இலையால் மூடப்பட்டு சாலையோரம் அனாதையாகபோடப்பட்டிருந்தது.
சென்னை அருகே உள்ள பாடிபுதுநகர் பகுதியில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்கடைக்கு போவதற்காக சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த பேப்பர் பார்சல் ஒன்றிலிருந்து குழந்தையின்அழுகுரல் கேட்டது.
இதையடுத்து அந்த பார்சலைத் திறந்து பார்த்த அந்தப் பெண் பதறிப் பாய் விட்டார்.
பிறந்து ஒரு நாளே ஆன, வயிற்றில் தொப்புள் கொடி கூட இன்னும் விழாத நிலையில் இருந்த ஒரு பெண் குழந்தை அந்த பார்சலில்வைக்கப்பட்டிருந்தது. செய்தித் தாளால் சுருட்டப்பட்டு, மேலே வாழை இலையை வைத்து அது பறந்து விடாமல் இருப்பதற்காக ஒரு சிறுகல்லும் வைக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டு பதறிப் போன அந்தப் பெண்மணி, தரையில் கிடந்த அந்தக் கண்மணியை எடுத்துக் கொண்டு குழந்தைகள் உதவி மையதொலைபேசி (1098) எண்ணுக்கு போன் செய்தார். பின்னர் அருகிலுள்ள ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரும்கொடுத்தார்.
உதவி மையத்தினரும் போலீசாரும் வரும் வரை அக் குழந்தையை எடுத்து மடியில் வைத்து கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப்பெண். பின்னர் அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தார்.
குழந்தை நன்றாக உள்ளதாகவும் தற்போது ஒரு பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தைகள் உதவி மைய இயக்குனர்பாஸ்கோ கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications