கோபால் தொடர்ந்த வழக்கு: ஜெயலலிதா, தேவாரத்திற்கு கோர்ட் நோட்டீஸ்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்ற சென்னைஉயர்நீதிமன்றம் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிரடிப் படையின் தலைவர் வால்டேர் தேவாரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், காட்டுக்குள் சென்று ராஜ்குமாரை மீட்பதற்கு தமிழகஅரசு தனக்கு கொடுத்திருந்த உறுதிமொழியை மீறக் கூடாது என்று உத்தரவிடக் கோரியும் நக்கீரன் கோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில்,
கடந்த 2000மாவது ஆண்டு ஜூலை 30ம் தேதி ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை மீட்டு வரக் கோரியும்,வீரப்பனுடன் சமாதானப் பேச்சு நடத்துமாறும் அப்போதைய தமிழக முதல்வர் (கருணாநிதி) சார்பில் எனக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை ஏற்று அரசுத் தூதராக போக நான் ஒப்புக் கொண்டேன். ஆனால் பின்னால் ஏதாவது பிரச்சினைகள் வரும் என்பதை எதிர்பார்த்து, 10நிபந்தனைகளை விதித்தேன். எழுத்துப் பூர்வமாக கர்நாடக மற்றும் தமிழக அரசுகளிடமிருந்து உறுதிமொழியைப் பெற்ற பிறகே காட்டுக்குள்போனேன்.
ஆனால், இப்போது என்னையே இந்த வழக்கில் சேர்த்து அரசு கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக முழுஉண்மைகள் வெளி வர வேண்டுமானால் கடத்தல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார் கோபால்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ் மனுவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இது உடனடியாக விசாரணைக்கு ஏற்கப்படுகிறதுஎன்று அறிவித்தார்.
இந்த மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா, அதிரடிப் படையின் தலைவரும் முன்னாள்டிஜிபியமான வால்டேர் தேவாரம், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தனித் தனி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications