யார்.... நாங்களா?: கருணாநிதி
சென்னை:
எங்களுக்கு எத்தனை பதவி தந்தாலும் திருத்தியடைய மாட்டோம் என்று பேசி இருப்பதன் மூலம் ஜெயலலிதாதனது வரலாறு தெரியாது என்பதை நிரூபித்துவிட்டார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
பதவி தான் பெரிதென்று நான் நினைத்திருந்தால் என்னைக் கைது செய்தபோது ஜெலலிதாவின் ஆட்சியைக்கலைக்கச் சொல்லியிருப்பேன் என்றார் கருணாநிதி.
இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி,
கடந்த ஆண்டு இதே மாதத்தில் தான் என்னை ஜெயலலிதா என்னென்னவோ வகையில் (நள்ளிரவில் கைது)அவமானப்படுத்தினார். அப்போது நான் நினைத்திருந்தால் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்கச்செய்திருப்பேன்.
ஆனால், 356வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சிக் கலைப்பு செய்வதை நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டேன்.அதனால் தான் ஜெயலலிதாவின் ஆட்சி தப்பியது.
எனது கட்சியினரின் வற்புறுத்தலையும் மீறி நான் ஆட்சியைக் கலைக்க மத்திய அரசை நெருக்கவில்லை. ஜெயிலில்இருந்து வெளியே வந்தபோது கூட இந்த ஆட்சியைக் கலைக்கக் கூடாது என்று தான் கூறினேன்.
பஞ்சாயத்துப் பதவியில் இருந்து ஜனாதிபதி பதவி வரை எத்தனை பதவிகள் தந்தாலும் திமுகவினர் திருப்தியடையமாட்டார்கள் என்று அந்த அம்மையார் கூறியிருக்கிறார். இதன் மூலம் கடந்த காலம் குறித்து ஞானமில்லாதவர்என்பதைக் காட்டிவிட்டார்.
வி.வி. கிரி, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங் ஆகியோரை ஜனாதிபதியாக்கியதில் முக்கிய பங்கு வகித்த கட்சி திமுக.இப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணனை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்தது நானும் மறைந்தமூப்பனாரும் தான் என்பதை அந்த அம்மையாருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பதவிக்காக நாங்கள் என்றும் எப்போதும் அலைந்தது இல்லை என்றார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications