நாக் ஏவுகணைகள் வெற்றிகரமாய் சோதனை
பாலாசூர் (ஒரிஸ்ஸா):
எதிரி நாட்டு டாங்கிகளை தகர்க்கும் நாக் ஏவுகணைகள் இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டன.
அப்துல் கலாம் உருவாக்கிய 5 ஏவுகணைகளில் ஒன்று இந்த நாக்.
ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் உள்ள பாலாசூர் சோதனை மையத்தில் இன்று காலை இருஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனையிடப்பட்டன.
டாங்கிகளில் இருந்து வெளியாகும் வெப்பத்தை வைத்து அவற்றை விரட்டிச் சென்று அழிக்கும் திறன்கொண்டது நாக் ஏவுகணை.
4 முதல் 6 கி.மீ. தூரத்தில் வரும் எதிரி நாட்டு டாங்கிகள், வாகனங்கள், கவச வாகனங்களை அழிக்க இந்தஏவுகணை உதவும். இதனை தரையிலிருந்தும் செலுத்தலாம். ஹெலிகாப்டரில் இருந்தும் வீசலாம்.
காலை 10.05 மணிக்கு முதல் ஏவுகணை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 1.10 மணிக்கு இரண்டாவது ஏவுகணைசெலுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. இரண்டும் மிகத் துல்லியமாக தங்கள் இலக்குகளைத் தாக்கின.
இந்த ஏவுகணை Top-attack trajectory என்ற தொழில்நுட்பம் கொண்டது. டாங்கிகளை அடைந்தவுடன் அதன்மேலாகப் பறந்து உச்சியில் இருந்து தாக்கும் திறன் கொண்டது நாக் ஏவுகணை. டாங்கிகளைப் பொறுத்தவரைஅவற்றின் உச்சிப் பாகததில் தான் குணடுகளைச் சுடும் பீரங்கிகள் இருக்கும். இதனால் அவற்றின் உச்சப் பகுதியைத்தாக்குதவது தான் முக்கியம்.
எந்த காலநிலையிலும் செயல்படும் திறன் கொண்டது.
இந்தச் சோதனையின்போது ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சிப் பிரிவான டி.ஆர்.டி.ஓவின் நாக் உற்பத்திப் பிரிவின்இயக்குனர் மிஸ்ரா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அங்கிருந்தனர்.












Click it and Unblock the Notifications