மத்திய அரசுப் பணிக்குத் திரும்பினார் மாஜி தலைமைச் செயலாளர் சங்கர்
டெல்லி:
தமிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சங்கர் மத்திய திட்டக் கமிஷனின்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுடனான மனஸ்தாபம் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் நீண்டஓய்வில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறினார்.
ஆனால், அவர் தனது தமிழக தலைமைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசுப் பணிக்குச்சென்றுள்ளார்.
மத்திய அரசுப் பணியில் பல்வேறு பொறுப்புகளில் திறமையான அதிகாரி என்று பெயர் பெற்றவர் சங்கர். திமுகஆட்சி போன பிறகு முதல்வரான ஜெயலலிதா டெல்லியில் இருந்து சங்கரை தமிழகத்துக் கொண்டு வந்துதலைமைச் செயலாளராக்கினார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனின் ஆலோசனையின்படி சங்கரை ஜெயலலிதா இங்கு கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது.
கருணாநிதி கைது போன்ற விவகாரங்களில் இவரது தலை உருண்டது. அப்போது தன்னிடம் விசாரணை நடத்தியமத்திய அரசு அதிகாரிகளிடம் இந்த கைது குறித்து என்னுடன் முதல்வர் பேசவேயில்லை என்றார்.
தமிழக அரசு நிர்வாகத்தில் சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரம் பெற ஆரம்பித்தது முதல் சங்கர்ஒதுக்கப்பட்டார். இதனால் ஐ.ஏ.எஸ். வர்க்கமே இரு சமூகமாக பிரிந்து நின்றது.
தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சாட்டையால் அடித்து தான் வேலை வாங்க வேண்டியுள்ளது என்றுஜெயலலிகா கூற ஏற்கனவே வெறுத்துப் போயிருந்த சசிகலா ஆதரவில்லாத ஐ.ஏ.எஸ். இன்றும் நொந்து போயினர்.
முதல்வரை சந்திக்க விடாமல் தலைமைச் செயலாளர் சங்கரையே சில சசிகலா ஆதரவு அதிகாரிகள் தடுத்தஅவலமும் நடந்தது.
இதையடுத்து மனமொடிந்து போன சங்கர் தன்னை விட்டுவிடும் ஜெயலலிதாவிடம் கூறினார். சிறந்த நிர்வாகியானஅவர் சசிகலா ஆதரவாளர்களிடம் சிக்கி சின்னா பினனாவானார்.
தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு ஒதுங்கிய அவர் மீண்டும் மத்திய அரசுப் பணிக்கே திரும்பிவிட்டார்.
அவர் மத்திய திட்டக் கமிஷன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications