ஐ.நாவில் இந்தியாவிடம் மூக்குடைபட்ட பாக், மெக்சிகோ

Subscribe to Oneindia Tamil

ஐக்கிய நாடுகள் சபை:

ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் குறித்து நடக்க இருந்த கலந்தாய்வுக் கூட்டம் (செமினார்) இந்தியா மற்றும்ரஷ்யாவின் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டது.

காஷ்மீர் விவகாரம் இரு நாட்டுப் பிரச்சனை. இதில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்று இந்தியா கூறிவருகிறது. இந்த விவகாரத்தை சர்வதே அளவில் பிரச்சனையாக்குவதையும் இந்தியா விரும்பவில்லை.

ஆனால், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது.

இந் நிலையில் ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கவுன்சிலின தாற்காலிக உறுப்பு நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின்உதவியுடன் இந்தப் பிரச்சனையை பாதுகாப்பு கவுன்சில் முன் இன்று மறைமுகமாக முன் வைத்தது. காஷ்மீர் குறித்தசெமினார் என்ற பெயரில் ஒரு கூட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு மெக்சிகோ ஏற்பாடு செய்தது. ஆனால், இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக இந்தியாஅறிவித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவும் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. புறக்கணிப்பதோடுமட்டுமல்லாமல் கூட்டத்துக்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்தது.

அதே போல பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக உள்ள மொரீஷியசும் இந்தக் கூட்டத்துக்கு எதிராக தனதுகண்டனத்தைத் தெரிவித்தது.

மெக்சிகோவின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு மெக்சிக்கோஅழைத்திருந்த பிரநிதிகள் பலரும் இந்திய எதிர்ப்பு நிலை கொண்டவர்கள்.

இதனால் ஐ.நாவில் உள்ள இந்திய அதிகாரிகள் ரஷ்யாவுடனும் ஐ.நா. சபை அதிகாரிகளுடனும் பேசினர்.இதையடுத்து ஐ.நா. சபை தனது நிகழ்ச்சி நிரலில் இந்தக் கூட்டத்தை குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டது. இது தவிரபாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இது தேவையில்லாத வேலை எனமெக்சிகோ அதிகாரிகளைக் கண்டித்தனர்.

மேலும் திடீரென பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களிடையே பேசிய தலைமை நாடான மொரிஷியஸ் பிரதிநிதிகாஷ்மீர் விவகாரம் இரு நாட்டுப் பிரச்சனை. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் தன் பேச வேண்டும் என்றார்.அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன.

அனைத்துத் தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து இந்தக் கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது மெக்சிக்கோ. அந்த நாட்டைத் தூண்டிவிட்ட பாகிஸ்தானும் அடங்கியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+