மத்திய அமைச்சராகிறார் வைகோ
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அமைச்சராகவுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
முதலில் அடுத்த வாரம் இந்த மாற்றங்களைச் செய்ய பிரதமர் திட்டமிட்டிருந்தார். ஆனால், பா.ஜ.கவில் யாரைஅமைச்சராக்குவது என்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பல மூத்த தலைவர்களும் அமைச்சர் பதவிக்கு வர போட்டியிடுவதால் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது சிறிதுதாமதமாகும் என்று தெரிகிறது.
ஆனால், இம் மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்றுபிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை ஒதுங்கியே இருந்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மத்திய அமைச்சராக்க வாஜ்பாய்முடிவு செய்துள்ளார். முதலில் வி.பி. சிங் காலத்தில் வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தது. ஆனால்,திமுக தலைவர் கருணாநிதி அதை விரும்பாததால் பதவி தரப்படவில்லை.
வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமரானபோது மத்திய அமைச்சரவையில் சேருமாறு வைகோவைவலியுறுத்தினார். ஆனால், தனது கட்சியைச் சேர்ந்த இருவரை மத்திய அமைச்சராக்கிவிட்டு ஒதுங்கினார் வைகோ.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமருக்கு முழு ஆதரவாய் இருக்கும் தலைவர்களில் ஒருவர் வைகோ. திமுக,பா.ம.கா. போன்றவை மோதல் போக்கை கடைபிடித்தபோது கூட வைகோ தொடர்ந்து வாஜ்பாய்க்கு ஆதரவளித்துவருகிறார்.
இதனால் பிரதமரின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராகியுள்ளார் வைகோ. அதே போல உள்துறை அமைச்சர்அத்வானி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் ஆகியோரின் அன்புக்கும்பாத்திரமாகியுள்ளார்.
இதனால் வைகோவை கேபினட் அமைச்சராக்க வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக வைகோவுடன்பிரதமர் பேசியிருப்பதாகத் தெரிகிறது.
அதே போல பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 2 பேருக்கும், திருநாவுக்கரசுக்கும் மத்திய அமைச்சர் பதவிதரப்படும் என்று தெரிகிறது.
இப்போது மத்திய அமைச்சரவையில் 31 கேபினட் அமைச்சர்கள், 33 இணை அமைச்சர்கள், 6 தனிப் பொறுப்புகொண்ட அமைச்சர்களும் உள்ளனர். பிரதமரையும் சேர்த்து மொத்தம் 71 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
இந்த எண்ணிக்கையை குறைக்கவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அனந்த்குமார் ஆகியோரை மீண்டும்கட்சிப் பணிக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். சுமார் 10 அமைச்சர்கள் பதவி இழக்கும் வாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications