கர்நாடக முதல்வருடன் பாமக எம்.பிக்கள் சந்திப்பு
பெங்களூர்:
காவிரியில் நீர் திறந்துவிடக் கோரி கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குழுஇன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசியது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான இந்தக் குழு முதல்வர் கிருஷ்ணாவை நேரில் சந்தித்தது. இக் குழுவில்எம்.பிக்களான மூர்த்தி, பொன்னுசாமி, சண்முகம், எம்.எல்.ஏக்கள் உள்பட 21 பேர் இடம் பெற்றிருந்தனர்.
காவிரிப் பாசன விவசாயிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதை இந்தக் குழுவினர் கிருஷ்ணாவிடம் விளக்கினர். உடனடியாக தண்ணீர்திறந்து விடுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆனால், மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் போதிய அளவு தண்ணீர் இல்லாததை பா.ம.கவினரிடம் சுட்டிக் காட்டிய கிருஷ்ணா,இப்போதைக்கு நீர் விட முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்.
காவிரி நதி நீர் ஆணையத்தில் இருந்து தமிழகம் விலகாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் பா.ம.கவினரிடம் கூறினார்.
ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் எதிர்ப்பு:
இந் நிலையில் காவிரி நதி நீர் ஆணையத்தை புறக்கணிக்கவும், நீர் விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்தியின் நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.
பிரச்சனைக்கு தீர்வு காண்பதைவிட்டுவிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அரசு இந்ததேவையில்லாத செயலில் இறங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். உண்மையிலேயே இந்த அரசுக்கு அக்கறைஇருதிருந்தால் கடந்த பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் காவிரி தொடர்பான இன்னொரு வழக்கு விசாரணைக்குவந்தபோதே அதை வேகமாக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்.
திமுக செய்ததற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் தான் ஜெயலலிதா ஆர்வம் காட்டுகிறார். இதனால்தான் நதி நீர் ஆணையத்தை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்.
வழக்கு தொடரும் எண்ணத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications