போலீசாரால் எனது உயிருக்கு ஆபத்து:நக்கீரன் கோபால் புகார்
சென்னை:
போலீஸ் கொடுமையிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால்.
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக கோபாலிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கோபிசெட்டிப்பாளையத்தில் வைத்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை என்ற பெயரில் தன்னை போலீஸார் கொடுமைப்படுத்துவதாக கோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ்,தலைமைச் செயலாளர், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, சிபிசிஐடி போலீஸ் உயர் அதிகாரிகள், சத்தியமங்கலம் நீதிபதிமற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கோபால் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கோபி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை என்ற பெயரில் என்னைக் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். தகாதவார்த்தைகளால் என்னை போலீஸார் அர்ச்சிக்கிறார்கள்.
10 மணிக்குத் தான் நான் போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஆனால் 10 மணிக்கு முன்பே எனது ஊழியர்கள்யாரும் சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் இருக்கக் கூடாது என்று போலீஸார் விரட்டுகிறார்கள்.
சிபிசிஐடி டி.எஸ்.பி நாகராஜன், என்னை தமிழர் விடுதலைப் படை தீவிரவாதி என்று கூறினார்.
அப்படி கூறாதீர்கள் என்று நான் கூறியபோது, ஒரு குற்றவாளிக்கு எப்படி மரியாதை கொடுக்க முடியும் என்று கடுமையாககூறினார்.
எனது கடும் எதிர்ப்பையும் மீறி என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையை வீடியோ படம் எடுத்துள்ளார் நாகராஜன். சிபிசிஐடிபோலீஸாரின் இந்த நடவடிக்கையால் எனது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
எனது உயிருக்கும் கூட இவர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன் என்று கூறியுள்ளார் கோபால்.












Click it and Unblock the Notifications