தொடர் மழை: ஊட்டி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டியில் பெய்து வரும் கன மழை காரணமாக 100 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைக்கும்நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சக்காடு என்ற இடத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மரக் கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனைபடைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி நேற்று தொடங்குவதாக இருந்தது. இதில் ஆயிரக்கணக்காண பள்ளி மாணவர்கள் பங்கேற்க இருந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் கடும் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சிறிய நிலச் சரிவுகளும் ஏற்பட்டுவருகின்றனர். இதையடுத்து மரக்கன்றுகள் நடைபெறும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரியாசாஹூ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications