சொத்து சேர்ப்பு வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்க தாமரைக்கனி கோரிக்கை
சென்னை:
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் சேர்த்தது தொடர்பாக தன் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கைமாநில அரசு விசாரிக்காமல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அதிக எம்.எல்.ஏ.தாமரைக்கனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தாமரைக்கனி தாக்கல் செய்துள்ள மனுவில்,
நான் கடந்த 2001ம் ஆண்டு வரை அதிமுகவில் உறுப்பினராக இருந்தேன். அதே ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலின்போது நான் சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தேன். இதனால் கோபமுற்ற கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னை கட்சியிலிருந்து நீக்கினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு நான் திமுகவில் சேர்ந்தேன். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப்போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்த நிலையில் விருதுநகர் பிரிவு ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள்எனது வீட்டுக்கு வந்து கடந்த 1989ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2001ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிவரையிலான காலகட்டத்தில் நான் வாங்கிய சொத்துக்கள் குறித்த விவரத்தைத் தருமாறு கூறி விட்டுச் சென்றனர்.
இதுதொடர்பாக நான் உரிய பதிலும் அளித்தேன். ஆனால் அதை ஏற்காமல், தீவிரமாக விசாரிக்காமல் என் மீதுஅதிக சொத்துக்கள் சேர்த்து விட்டதாக வழக்குப் போட்டுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக அரசின் கீழ் இயங்கி வரும் ஊழல் கண்காணிப்புத் துறையிடமிருந்து நியாயமான,நேர்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளார் தாமரைக்கனி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications