கராத்தே மேயரானதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மேயர் பதவியை காலியாக வைக்கச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்தப் பொறுப்பில்கராத்தே தியாகராஜனை நியமித்திருப்பதை எதிர்த்து வழக்கறிஞர் விஜயன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.

ஸ்டாலினிடம் இருந்த மேயர் பதவியை ஒருவருக்கு ஒரு பதவி சட்டம் போட்டு பறித்தது தமிழக அரசு. இதைஎதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஸ்டாலின் பதவிப் பறிப்புக்கு தடை விதிக்கமறுத்தது.

அதே நேரத்தில் இந்த வழக்கில் முழு விசாரணை முடிந்து இறுதித் தீர்ப்பைத் தரும் வரை மேயர் பதவிக்கு தேர்தல்நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந் நிலையில் பொறுப்பு மேயராக துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மாநகராட்சி ஆணையர் கலைவாணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை எதிர்த்து வழக்கறிஞர் விஜயன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், கராத்தேதியாகராஜனை மேயர் பதவியில் அமர்த்தியதன் மூலம் தமிழக அரசு நீதிமன்றத்தை அவமதித்துவிட்டது.

மேயர் பதவிக்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி அந்தப்பதவியை காலியாக வைத்திருக்க வேண்டும். ஆனால், துணை மேயரை இந்தப் பதவியில் அமர்த்திவிட்டார்கள்.அவரை பதவி நீக்கம் செய்து, நீதிமன்ற அவமதிப்பு செய்த தமிழக அரசைக் கண்டிக்க வேண்டும் என்று விஜயன்தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி முன் விசாரணைக்கு வருகிறது.

ஸ்டாலின் பதவிப் பறிக்கப்பட்டது தொடர்பாக உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் அவருக்காகஆஜரானவர் வழக்கறிஞர் விஜயன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவினர் தொடர் போராட்டம்:

இதற்கிடையே ஸ்டாலினிடம் இருந்து மேயர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர்தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, எம்.பி. விடுதலை விரும்பி ஆகியோர்தலைமையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட100க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல கோவை செசன்ஸ் நீதிமன்றத்தின் அருகிலும் சாலை மறியல் போராட்டம் நடத்திய திமுகவினர்கைதாயினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+