டைம்ஸ் நிருபரிடம் இந்தியா தொடர்ந்து விசாரணை
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை குறித்து தவறாக செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் டைம் பத்திரிக்கையின்இந்திய நிருபரிடம் மத்திய அரசு பாஸ்போர்ட் மோசடி குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது.
அலெக்ஸ் பெர்ரி என்ற அந்த நிருபரிடம் இரு பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.உங்களுக்கு எப்படி இரு பாஸ்போர்டுகள் வந்தன என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் என வெளிநாட்டினர்பதிவு அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியது. அப்போது அவர் வீட்டில் இல்லை.
இதையடுத்து இந்தியா திரும்பியவுடன் உடனடியாக பதிவு மையத்துக்கு வர வேண்டும் என்று உத்தரவுஅனுப்பப்பட்டது. இதையடுத்து 5 நாட்களுக்கு முன் இந்த அலுவலகத்துக்கு பெர்ரி வந்தார். அவரிடம்வெளியுறவுத்துறை அதிகாரிகள், கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இன்று மீண்டும் அவரை அலுவலகத்திக்கு வர வைத்து இரண்டாவது முறையாக இந்திய குடியேற்றத்துறை(இமிக்ரேசன்) அதிகாரிகளும் கஸ்டம்ஸ் அதிகாரிகளும் விசாரித்தனர்.
இந்தியாவுக்கு வெளியே இனிமேல் பயணம் செய்தால் குடியேறத்துறை அதிகாரிகளிடம் இனி முன் அனுமதி பெறவேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாரிகள் முன் ஆஜரான பெர்ரி தனது பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுகள் குறித்து பிரிட்டிஷ் தூதரகத்திடம்இருந்து விளக்கக் கடிதத்தை ஒப்படைத்தாகக் கூறப்படுகிறது.
பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களுக்காக இவர் வேலை பார்த்து வருவது குறித்தும் அதிகாரிகள்கேள்விகள் எழுப்பினர்.
இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை மிக மோசமாகிவிட்டதாகவும் அவரால் எந்த விஷய்ததிலும் கவனம்செலுத்த முடியவில்லை, இவரிடம் அணு ஆயுதங்களுக்கான கட்டுப்பாடு இருப்பது சரியில்லை என்று டைம்ஸ்இதழில் கட்டுரை வெளியானது. அதை பெர்ரி தான் எழுதினார்.
இதையடுத்து இந்தியா இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்தியா மீது பெர்ரி மதிப்பு:
விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த பெர்ரி நிருபர்களிடம் கூறுகையில்,
மற்ற ஆசிய நாடுகளில் அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டால் உடனே நாட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள். ஆனால், இந்திய ஜனநாயகம் மிக உயர்ந்தது. அப்படிப்பட்ட செயல்களில் இந்தியாஈடுபட்டதேயில்லை.
பாஸ்போர்ட் குறித்து கேள்வி கேட்டார்கள், பதில் தந்தேன். மிக நேர்மையான கேள்விகளைத் தான் கேட்டார்கள்.இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டால் இந்தியாவைவிட்டு வெளியேற மாட்டேன். இந்திய ஜனநாயகத்தை நான்மிக மிக மதிக்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications