முஷாரப் பல்டி: மீண்டும் வருகிறார் அமெரிக்க அமைச்சர்
நியூயார்க்:
அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி மீண்டும் இந்தியா,பாகிஸ்தானுக்கு வருகை தரவுள்ளார்.
3 வாரங்களுக்கு முன் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்த நேரத்தில் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்மூலம் தான் அமைதி திரும்பியது. பாகிஸ்தான் சென்று அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் முஷாரபை சந்தித்தஆர்மிடேஜ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்துமாறு கூறினார்.
தான் முஷாரபிடம் பேசிய விவரங்களையும் வெளியிட்டார். தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதைநிரந்தரமாகத் தடுக்க வேண்டும், தீவிரவாத முகாம்களை மூட வேண்டும் என்று முஷாரபிடம் கூறியதாகஆர்மிடேஜ் விளக்கம் தந்தார்.
அப்போது தான் இந்தியத் தாக்குதலை தடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவும் எனவும் அவர் திட்டவட்டமாககூறியதையடுத்துத் தான் சில நடவடிக்கைகளை முஷாரப் எடுத்தார். தீவிரவாதிகளை இந்தியாவுக்குள்அனுப்புவதை நிறுத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்தியா வந்த ஆர்மிடேஜ் தீவிரவாதிகளைத் தடுப்பதாக என்னிடம் முஷாரப் உறுதிமொழிதந்துள்ளார். எனவே, தாக்குதல் நடத்தும் திட்டத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றார். இதை ஏற்றுஇந்தியாவும் அமைதியானது.
ஆனால், திடீரென தீவிரவாதிகளை நிரந்தரமாக தடுப்பதாக நான் ஆர்மிடேஜிடம் உறுதிமொழி ஏதும் தரவில்லைஎன்று முஷாரப் பல்டி அடித்தார்.
இதை அமெரிக்கா கண்டித்தது. எங்களிடம் முஷாரப் உறுதிமொழி தந்தது உண்மை என இந்தியாவில் உள்ளதூதரகத்தின் மூலம் விளக்கம் தந்து முஷாரபுக்கு அமெரிக்கா அதிர்ச்சி தந்தது.
அத்தோடு நிறுத்தாமல் ஆர்மிடேஜை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.நேற்று நியூயார்க்கில் நிருபர்களிடம் பேசிய ஆர்மிடேஜ், நான் ஆகஸ்ட் 6ம் தேதி மீண்டும் பாகிஸ்தான் சென்றுமுஷாரபை சந்தித்துப் பேச உள்ளேன். அப்போது டெல்லிக்கும் சென்று இந்தியத் தலைவர்களையும் சந்திப்பேன்என்றார்.
இந் நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய முஷாரப், காஷ்மீர் பிரச்சனையை உடனே தீர்க்க இந்தியா பேச்சுநடத்த வேண்டும். இல்லாவிட்டால் காஷ்மீர் இன்னொரு பாலஸ்தீனப் பிரச்சனையாக மாறிவிடும் என்றார்.
தீவிரவாதிகளை அடக்கிவிட்டு வந்தால் தான் பாகிஸ்தானுடன் பேச்சு என்ற எங்களது நிலையில் எந்த மாற்றமும்இல்லை என இந்திய வெளியுவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் முஷாரபுக்கு பதில் தந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications