தமிழர்கள் நாடு திரும்ப இலங்கை அழைப்பு
சென்னை:
இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனே இன்று தமிழக கல்வி மற்றும் அகதிகள்மறுவாழ்வுத்துறை அமைச்சர் தம்பிதுரையை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜெயவர்த்தனே,
நாளை மறு தினம் (28ம் தேதி) முதல்வர் ஜெயலலிதாவுடன் தமிழ் அகதி மக்களை மீண்டும் இலங்கைக்குஅழைத்துச் செல்வது குறித்து பேசவுள்ளேன்.
அதே போல தமிழகத்தில் உள்ள எல்லா அகதிகள் முகாம்களுக்கும் சென்று அனைத்து தமிழர்களையும்தாய்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளேன்.
இனப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்குவேன்.எப்படி இலங்கை திரும்வது, எங்கே குடியேறுவது, எப்படி உதவிகள் பெறுவது என்பது குறித்து விளக்கும் ஒருபுத்தகமும் வெளியிடப்படும். இந்தப் புத்தகம் அகதிகளாக தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாகவழங்கப்படும்.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள்உணர்ந்துள்ளோம் என்றார் ஜெயவர்த்தனே.
1983ம் ஆண்டு வெடித்த இனக் கலவரத்தை அடுத்து சுமார் 1 லட்சம் தமிழர்கள் இலங்கையில் இருந்துதோணிகளிலும் படகுகளிலும் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தனர். இவர்களில் 66,000 பேர் முகாம்களிலும் பிறர்வெளியிடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications