கார் கடத்திய கும்பல் இமாம் அலியின் கூட்டாளிகளா? போலீசார் விசாரணை
தர்மபுரி:
சேலத்தில் டாக்சியை வாடகைக்கு எடுத்து அதைக் கடத்த முயன்று பிடிபட்ட கும்பல் அல்-உம்மா தீவிரவாதி இமாம்அலியின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.
இவர்கள் திருவண்ணாமலையில் கும்பாபிஷேகத்தின்போது வெடிகுண்டுகளை வைக்க திட்டமிட்டிருக்கலாம் என்றுபோலீசார் கருதுகின்றனர்.
நேற்று இந்தக் கார் கடத்திய கும்பலை போலீசார் தடுத்தபோது தப்பியோடிவர்களில் ஒருவனான சிராஜூதீன்என்பவன் சயனைட் அருந்தி உயிரைவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரன், ராஜரிஷி ஆகிய இருவரைபோலீசார் விரட்டிப் பிடித்தனர்.
நேற்று நள்ளிரவில் இன்னொருவனும் பிடிபட்டுவிட்டான். ஒருவன் தப்பிவிட்டான்.
நேற்று முன் தினம் இரவு 5 பேர் கொண்ட கும்பல் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்குவந்தது. அவர்கள் பெங்களூர் செல்வதற்கு டாக்சியை வாடகைக்கு எடுத்தனர்.
டாக்சியை துரைராஜ் என்ற டிரைவர் ஓட்டினார். கார் தர்மபுரியை அடைந்தவுடன் எஸ்.டி.டி. பூத்துக்கு சென்றஅவர்கள் சிலருடன் பேசினர். பின்னர் பெண்ணாகரம் அருகே ஒயின்ஷாப்பில் நுழைந்து தண்ணி அடித்தனர்.
திரும்பி வந்து காரை மீண்டும் கிளப்பச் சொன்றது அந்தக் கும்பல். தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் காரைநிறுத்துமாறு அந்தக் கும்பல் கூறியது. உடனே அந்த 5 பேரும் டிரைவரை அடித்து உதைத்தனர். இதில் அவர்மயக்கமடைந்தார். உடனே அவரை சாலையோரம் தூக்கிப் போட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு தப்பினர்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து சுதாரித்துக் கொண்ட அந்த டிரைவர் அருகில் இருந்த வீட்டுக்குச் சென்றுஅங்கிருந்து போன் மூலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தந்தார். நள்ளிரவில் அந்தத் கதவல் எஸ்.பி.பெரியய்யாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர் சென்னைக்கும் தகவல் தந்தார்.
இதையடுத்து அந்தக் காரை மடக்கும் முயற்சியில் போலீசாரை ஈடுபடுத்தினார். பெட்ரோல் பங்கு கொள்ளைகள்காரணமாக பெங்களூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் இந்த கார் குறித்த தகவல் தரப்பட்டது. இதையடுத்து அனைத்துசோதனைச் சாவடிகளிலும் போலீசார் உஷாராயினர்.
இந் நிலையில் அந்தக் கார் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரபாளையம் என்ற இடத்துக்கு வந்தது.
உடனே அங்கு சோதனையில் இருந்த மதுவிலக்குப் பிரிவு போலீசார் அந்தக் காரை அங்கிருந்த போலீசார்தடுத்தனர். ஆனால், அந்தக் கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்தக் காரை ஜீப்பில் விரட்டினர்.
இதையடுத்து படுவேகத்தில் காரை ஓட்டியது அந்தக் கும்பல். இறுதியில் கார் சாலையோரம் கொட்டப்பட்டிருந்தமணல் மேட்டில் மோதியது. சக்கரங்களில் மணலில் புதைந்ததால் கார் மேற்கொண்டு போக முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் காரிலிருந்து இறங்கி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ஓடினர். அவர்களை போலீசாரும்ரோட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொது மக்களும் சேர்ந்து விரட்டினர்.
துப்பாக்கிகளைக் காட்டி சுட்டுவிடுவோம் என்று எச்சரித்தனர். ஆனால், அந்தக் கும்பல் தொடர்ந்து இருட்டில்ஓடியது. போலீசாரும் விடாமல் துரத்திச் சென்றனர். இதில் மகேந்திரன் (22), ராஜரிஷி (26) ஆகிய இருவரும்போலீசாரிடம் சிக்கினர்.
சிராஜூதீன் (23) என்பவன் இன்னொருவன் போலீசாரிடம் சிக்கிவிடாமல் இருக்க சயனைட் விஷத்தை அருந்திஅந்த இடத்திலேயே உயிர் விட்டான். அவனைக் காப்பாற்ற போலீசார் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
மற்ற இருவரும் அந்தக் காட்டுப் பகுதியில் இருட்டில் ஓடி தப்பிவிட்டனர். பிடிபட்ட இருவரிடம் விசாரித்ததில்தப்பிச் சென்ற இருவரது பெயர்களும் கமல்ராஜ் (27), பாட்ஷா (26) என்று தெரியவந்தது.
இவர்களில் ஒருவன் நேற்று இரவு போலீசாரிடம் சிக்கிவிட்டான். சிக்கியவனின் பெயரை போலீசார்தெரிவிக்கவில்லை. இன்னொருவன் தலைமறைவாகிவிட்டான்.
இவர்கள் அனைவருமே திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
தப்பியோடியவனைப் பிடிக்க தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சயனைட் அருந்தி உயிரைவிட்டுள்ளதால் இக் கும்பல் மீது பலவித சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் இமாம்அலியின் கூட்டாளிகளாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் நாளை கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில் அந் நகருக்குச் செல்லும் வழியில் இந்தக்கும்பல் பிடிபட்டுள்ளதால் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications