காவிரி: பிரதமரிடம் இன்று பேசுவேன்- கிருஷ்ணா
பெங்களூர்:
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் விட இயலாது என்பதை பிரதமர் வாஜ்பாயிடம் இன்று மாலை தொலைபேசியில்விளக்குவேன் என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார்.
இன்று தனது அமைச்சரவையை அவர் மாற்றியமைத்தார். ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களின்பதவியேற்பு நடந்தவுடன் அமைச்சரவைக் கூட்டத்தை கிருஷ்ணா கூட்டினார்.
அதில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில்,
கர்நாடகத்தில் மழையளவு போதுமான அளவு இல்லை. கபினி, கிருஷ்ணராஜ சாகர், கொரூர் ஆகிய காவிரியின்குறுக்கே உள்ள அணைக் கட்டுகளில் நீர் வரத்து போதுமான அளவு இல்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தவிவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரதமருக்கு உரிய பதில் தருவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குகடிதம் எழுதியபோது என்ன நிலை இருந்ததோ அதே தான் இப்போதும் நிலவுகிறது. அந்த கடிதத்தில்கூறப்பட்டுள்ள விவரங்களைத் தான் பிரதமரிடம் விளக்கப் போகிறேன் (இந்தக் கடிதத்தில் கர்நாடகம் மிகத்தவறான தகவல்களைத் தந்துள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது).
நேற்று என்னுடன் பேசிய பிரதமர் கர்நாடக அணைகளில் நீர் நிலைலை, பயிர்கள் குறித்து விவரமும் கேட்டார்.நான் அதிகாரிகளிடம் பேசிவிட்டு இன்று (வியாழக்கிழமை) விளக்கம் தருவதாகக் கூறியிருந்தேன் என்றார்.
நேற்று பிரதமர் தன்னுடன் பேசியதையடுத்து நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா, எங்களிடம் எங்கே நீர் இருக்கிறதுஎன்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்துக்கு 3 டி.எம்.சி. நீர் தர வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதை உத்தரவாக ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் அமைப்புச் சட்டப்படி பிரதமர் சொல்வதை சில நேரங்களில் மாநில அரசுகள் ஏற்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால், இப்போது கர்நாடக அணைக் கட்டுகளில் எங்கே தண்ணீர் இருக்கிறது. எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியும். அணைக் கட்டுகளின் நீர் மட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசியுள்னேன்.விட்டு பிரதமருக்குபதில் அனுப்பப்படும் என்று கூறியிருந்தார்.
பிரதமருக்கு உரிய பதில் அனுப்ப்படும் என்று கூறியுள்ளதன் மூலம் தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்பதைகிருஷ்ணா மறைமுகமாகக் கூறுவதாகக் கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications