தாமரைக்கனி கைது: அதிமுக தொண்டரை கொல்ல முயன்றதாக மகன் புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
அதிமுக தொண்டரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் முன்னாள்எம்.எல்.ஏவும் அந்நகராட்சியின் தலைவருமான தாமரைக்கனியைப் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவராக தாமரைக்கனி உள்ளார். இவர் திமுகவில் இருக்கிறார். இவரது மூத்த மகன்இன்பத்தமிழன் அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை நகராட்சிக்குள் வந்த இன்பத்தமிழன் பொது மக்களிடம் மனு வாங்கினார். எம்.எல்.ஏ.அலுவலகத்தில் மனு வாங்காமல் நகராட்சியில் வந்து மனு வாங்குதைத் தட்டிக் கேட்ட தாமரைக்கனியின் இளையமகன் தங்கமாங்கனியை இன்பத்தமிழனின் ஆதரவாளர்கள் கத்தியால் குத்தினர்.
இதையடுத்து நேற்று நகராட்சியின் அவசரக் கூட்டத்தை தாமரைக்கனி கூட்டினார். அதில் இனி இன்பத்தமிழன்நகராட்சியில் வந்து மனு வாங்கக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தார் தாமரைக்கனி.
இந்நிலையில் அதிமுக தொண்டரான விஜயகுமார் என்பவரைத் தாக்கி கொலை செய்ய தாமரைக்கனி முயன்றஅவரது மகன் இன்பத்தமிழன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றார்.
ஆனால் உள்ளே தாமரைக்கனி இருந்ததால் நகராட்சியின் வாயில் கதவுகள் மூடப்பட்டன. ஆனாலும் நகராட்சியின்வாயில் அருகிலேயே இன்பத்தமிழன் சுமார் 3 மணி நேரம் நின்று கொண்டே இருந்தார். தாமரைக்கனியைக் கைதுசெய்தே தீரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை தாமரைக்கனியைப் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட தாமரைக்கனியை 15 நாள் காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications