டி.வி.எஸ்.-50ல் மேயர் கொடி: சென்னையில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் அடிதடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் தங்களுடைய ஸ்கூட்டர், சைக்கிள், பைக்குகள், லூனா, டி.வி.எஸ்.-50 என அனைத்து வாகனங்களிலும் மேயர் கொடியைக் கட்டி பறக்கவிட்டபடி மாநகராட்சிக் கூட்டத்துக்கு வந்ததைத் தொடர்ந்து கூட்டத்தின் போது அவர்களுக்கும் அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே பயங்கர அடிதடி சண்டை ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி மேயராக இருந்த ஸ்டாலின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் புதிய மேயராகப்பொறுப்பேற்றுக் கொண்ட "கராத்தே" தியாகராஜன் இன்று முதல் முறையாக மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஆனால் சென்னை மேயர் பதவியிலிருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டதைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும்கறுப்பு சட்டை அணிந்து வந்தனர்.

அதே போல மேயரின் கொடியை கராத்தே தியாகராஜன் தனது காரில் பயன்படுத்தி வருவதற்குப் போட்டியாகதிமுக கவுன்சிலர்களும் தங்களது ஸ்கூட்டர், சைக்கிள், பைக்குகள், லூனா, டி.வி.எஸ்.-50 என அனைத்துவாகனங்களிலும் மேயர் கொடியைக் கட்டி பறக்கவிட்டபடி மாநகராட்சிக்கு வந்தனர்.

மநகராட்சிக் கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில் பேசிய திமுக கவுன்சிலரான மணியம், சென்னைமேயராகப் பொறுப்பேற்றுள்ள கராத்தே தியாகராஜன், மேயரின் சின்னம் மற்றும் மேயர் பயன்படுத்தும் கார்ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்.

விதிப்படி தான் கராத்தே தியாகராஜன் இவற்றைப் பயன்படுத்துகிறாரா அல்லது தமிழக அரசின் நிர்ப்பந்தத்திற்குஅடி பணிந்து அதிகார துஷ்பிரயோகம் செய்கிறாரா என்று அவருடன் திமுக உறுப்பினர்களும் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையரான கலைவாணன், இதில் எந்த விதமான அதிகாரதுஷ்பிரயோகமும் இல்லை என்று கூறினார்.

தங்கள் கேள்விகளுக்கு கலைவாணன் நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்று கூறிய திமுக உறுப்பினர்கள் இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

ஆனால் சிறிது நேரத்திற்குள்ளேயே திரும்பி வந்த திமுக உறுப்பினர்கள் மேயருக்கு எதிராக கோஷங்கள்எழுப்பினர். இதை அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையேகாராசாரமாக விவாதம் நடந்தது.

அப்போது பேசிய அதிமுகவினர், நீங்கள் எப்படி உங்கள் சைக்கிள், டிவிஎஸ்-50யில் எல்லாம் மேயர் கொடியைபறக்க விடலாம் என்று கேட்டனர்.

ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தபோது த.மாகா. கவுன்சிலர் வெற்றிவேல் திமுகவினர்தேவையில்லாமல் பிரச்சனை செய்வதாகக் கூறினார். தொடர்ந்தி திமுகவினரைப் பார்த்து தகாத வார்த்தைகளால்திட்டினார்.

இதையடுத்து அவரை அடிக்க சில திமுகவினர் பாய்ந்து வந்தனர். இதைத் தொடர்ந்து வெற்றி வேலுக்கு ஆதரவாகஅதிமுகவினர் ஓடி வந்தனர். இதைத் தொடர்ந்து திமுக- அதிமுக, த.மா.கா. உறுப்பினர்கள் அடிதடியில்ஈடுபட்டனர்.

த.மா.கா. கவுன்சிலர் வெற்றிவேல், திமுகவினரைத் தாக்கினார்.

போடா.. டேய்.. நீ ஆம்பிளையா... கோஷங்கள் எல்லாம் எழுந்தன். அடிதடி நடந்தபோது அதிமுக பெண்உறுப்பினர்கள புத்தகங்களைத் தூக்கி திமுகவினர் மீது வீசினர். பல பெண் உறுப்பினர்களும் நாற்காலியின் மீது ஏறிநின்று கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.

இதனால் மாநராட்சிக் கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் உறுப்பினரான தேவியும் வெளிநடப்பு செய்தார்.

கோவை மாநகராட்சியிலும் மோதல்:

இதற்கிடையே இன்று நடந்த கோயம்புத்தூர் மாநகராட்சிக் கூட்டத்திலும் ஸ்டாலின் பதவிப் பறிப்பை எதிர்த்துதிமுக உறுப்பினர்கள் கறுப்பு உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

அங்கும் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாயினர்.

பாரதீய ஜனதா தவிர்த்த பிற கட்சி கவுன்சிலர்களை அவைக் காவலர்களைக் கொண்டு மேயர் வெளியற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+