மட்டக்களப்பில் வன்முறை: 4 பேர் சாவு- ஊரடங்கு அமல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்து வரும் மோதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஒருவாரமாக இந்த மோதல் நடந்து வருகிது.

வேளைச்சேனை எஸ்பிளனேட் என்ற இடத்தில் கிரனைட் குண்டுகள் வீசப்பட்டதில் 4 பேர் இறந்தனர். பஸ்கள்,ஆம்புலன்கள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது.

நேற்று நடந்த தாக்குதலில் 50 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிரனைட்குண்டுவெடிப்பில் காயமடைந்தனர்.

மக்களிடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக ராணுவத்துடன் சேர்ந்த ஊர்வலமாகச் சென்ற கோவில் பூசாரிகள்மற்றும் மசூதிகளின் நிர்வாகிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.

மேலும் தமிழர்களின் கிராமத்தின் மீது மார்ட்டர் குண்டுகளாலும் தாக்குதல் நடந்தது. இதில் யாரும்காயமடையவில்லை. இந்த குண்டு வெடித்த இடத்துக்கு அருகில் நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவினர்இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவங்களையடுத்து இலங்கை முஸ்லீம் காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் ரளெப் ஹக்கீம் மற்றும் மூத்தஅமைச்சரான கரு ஜெயசூரியா ஆகியோர் மூதூருக்கு விரைந்து இரு மதத்தினருடனும் பேச்சு நடத்தினர்.

வேளைச்சேனையில் கடந்த இருநாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இங்கு அமைதியாகபோராட்டம் நடத்திய தங்கள் மீது தாக்குதல் நடந்ததாக தமிழர்களும், தங்களது கடைகள் தாக்கப்பட்டதாகமுஸ்லீம்களும் புகார் கூறியுள்ளனர்.

இந்தப் பகுதியில் முஸ்லீம் கடை உரிமையாளர்களிடம் எல்.டி.டி.ஈ. வரிப் பணம் கேட்பதால் தான் பிரச்சனைஏற்பட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. இதையடுத்து கடந்த ஏப்ரலில் விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகரனை அமைச்சர் ஹக்கீம் சந்தித்துப் பேசினார்.

அப்போது முஸ்லீம் கடைக்காரர்களிடம் வரி வசூல் செய்வதை கைவிடுவதாக புலிகள் தலைவர் உறுதியளித்தார்.மேலும் இந்தப் பகுதியில் இருந்து இனப் பிரச்சனையால் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் மீண்டும் திரும்ப வேண்டும்என்றும் பிரபாகரன் கோரிக்கை விடுத்தார். இந் நிலையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

புலிகள் அறிக்கை:

இதையடுத்து புலிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமைதியை விரும்பால சில சமூகவிரோதிகள் தான் இந்த மோதலை தூண்டு வருகின்றனர். முஸ்லீம் பகுதியைச்சேர்ந்த சில சமூக விரோதிகள் தான் இதற்குக் காரணம். பெரும்பாலான முஸ்லீம்கள் அமைதியை விரும்புகின்றனர்.எனவே, அப்பாவி முஸலீம்களை தமிழர்கள் தாக்கக் கூடாது.

அதே போல சிறிய பிரச்சனைகளை முஸ்லீம்கள் பெரிதாக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+