தூத்துக்குடி அருகே ரூ.2,000 கோடியில் தொழிற்சாலை: 3,000 பேருக்கு வேலை
சென்னை:
டாடா நிறுவனம் சார்பாக தூத்துக்குடி அருகே ரூ.2,000 கோடி முதலீட்டில் டைட்டானியம்-டை-ஆக்சைடுதொழிற்சாலை ஒன்று நிறுவப்படவுள்ளது.
இது தொடர்பாக டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. முத்துராமன் மற்றும் தமிழக அரசு தொழில்துறைச்செயலர் அருண் ராமநாதன் ஆகியோருக்கு இடையே முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று(வியாழக்கிழமை) ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த3,000 பேர் வேலை வாய்ப்புப் பெறுவார்கள். இவர்களில் 1,000 பேருக்கு நேரடியாகவும் மீதமுள்ளவர்களுக்குமறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பெயிண்ட், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்புக்குத் தேவைப்படும் டைட்டானியம்-டை-ஆக்சைடுஎன்ற வேதிப் பொருள் தமிழகக் கடற்கரையின் 250 சதுர கி.மீ. பரப்பில் இயற்கையாகவே தாதுப்பொருளாகக்கிடைக்கிறது.
தற்போது வெளிநாடுகளிலிருந்து தான் ஆண்டு தோறும் 30,000 டன் அளவுக்கு இந்த வேதிப் பொருள் இறக்குமதிசெய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ள இந்த ஆலையின் மூலம் ஆண்டுக்கு 60,000 டன் அளவுஇவ்வேதிப் பொருள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் மூலம் இந்த ஆலைக்குத் தேவையான 30 மெகாவாட் மின்சாரம்மற்றும் 1.2 கோடி கேலன் தண்ணீரை தமிழக அரசே வழங்குகிறது.
அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஆலை தன்னுடைய உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications