சென்னையில் முகமூடிக் கொள்ளை: கணவன்- மனைவியை கட்டிப்போட்டு நகை பறிப்பு
சென்னை:
சென்னையில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் நுழைந்த முகமூடிக் கொள்ளைக் கும்பல் கணவன், மனைவியைகட்டிப் போட்டுவிட்டு நகைகளை அள்ளிச் சென்றது.
சென்னையில் இதுவரை வீடுகளை உடைத்துத் தான் கொள்ளை நடந்து வந்தது. இதனால் வீட்டை பூட்டிவிட்டுயாரும் இப்போது வெளியே செல்வதில்லை. குறிப்பாக இரவில் வீடுகளை பூட்டிவிடடுச் செல்ல முடியாத நிலைஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் வீட்டுக்குள் நுழைந்து உரிமையாளர்களைக் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. கார்டன் காலனியில் வசித்து வருபவர் முருகன். இவர் ஒரு தனியார்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு இவரது வீட்டின் கதவு தட்டப்பட்டது. இதையடுத்து தூக்கம் கலைந்த முருகன்ஜன்னலைத் திறந்து வந்திருப்பது யார் என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது இவரது மனைவி வனிதா தேவி வீட்டின் கதவைத் திறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த4 பேர் கத்திகளைக் காட்டி இருவரையும் வாயை மூடுமாறு எச்சரித்தனர். அவர்கள் அனைவரும் முகமூடிகளைஅணிந்திருந்தனர்.
பின்னர் இருவரையும் பெட்ரூமுக்குள் தள்ளிச் சென்று தாங்களே கொண்டு வந்திருந்த கயிறுகளால் கட்டிலோடுசேர்த்து கட்டினர். வாயில் துணிகளை வைத்து அடைத்தனர். இவர்களது மகனையும் வாயில் துணியை அடைத்துக்கட்டிப் போட்டனர்.
பின்னர் வனிதாதேவியிடம் நகைகள் எங்கு இருக்கின்றன என விசாரித்தனர். அவர் பீரோவில் இருப்பதாகக்கூறியவுடன் அதன் சாவி இருக்கும் இடத்தை கேட்டறிந்து அதை எடுத்தனர்.
தொடர்ந்து பீரோவைத் திறந்து அதில் இருந்த 20 பவுன் நகைகளையும், ரூ. 2,,000 பணத்தையும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் கத்தியைக் காட்டி வனிதாதேவி அணிந்திருந்த தாலிச் சங்கிலி, தோடுகளையும் பறித்துக் கொண்டனர்.
20 நிமிடங்களில் நகை, பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டின் கதவை வெளியில் இருந்து பூட்டிக் கொண்டுதப்பிவிட்டனர்.
இதன் பின்னர் தங்களை கட்டுகளில் இருந்து விடுவித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
தப்பிச் செல்லும்போது கொள்ளையர்கள் துணியைக் கொண்டு கைரேகைகளை மிக ஜாக்கிரதையாகஅழித்ததாகவும் வனிதா தேவி கூறியுள்ளார். மிக நெருக்கமாக வீடுகள் அமைந்த பகுதியில் நடந்துள்ள இந்ததுணிகர கொள்ளைச் சம்பவம் இங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்தப் பகுதியை நன்கு அறிந்த கும்பல் தான் இச் செயலைச் செய்திருக்க வேண்டும் என்று போலீசார்கருதுகின்றனர். அபிராமபுரம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications