தாராபுரம் அருகே சத்துணவு சாப்பிட்ட 100 குழந்தைகள் மயக்கம்
தாராபுரம்:
தாராபுரம் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் திடீரென்று மயங்கி விழுந்தனர்.
தாராபுரத்தை அடுத்த சிக்கானபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 113 குழந்தைகளுக்குநாள்தோறும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அந்தக் குழந்தைகளுக்கு சுண்டக் கடலையுடன் சத்துணவுவழங்கப்பட்டது.
இதைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சுமார் 100 குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழ ஆரம்பித்தனர்.
இதைக் கண்டதும் பதறிப் போன ஊழியர்களும் ஆசிரியர்களும் உடனடியாக அந்தக் குழந்தைகளை தாராபுரம்அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்படுவதைக் கடந்த ஆண்டு நிறுத்திய தமிழக அரசு, அதற்குப் பதிலாக தற்போதுசுண்டக் கடலையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications